BSNL போட்டப்போடு.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவுக்கு ஒரு ரூட்டு என்றால், பிஎஸ்என்எஸ் (BSNL) நிறுவனத்துக்கு தனி ரூட்டுதான் என்று சொல்லும் அளவுக்கு வெறும் ரூ 699 திட்டத்தில் 5 மாதங்களுக்கான சலுகைகளை அள்ளிக் கொடுத்துள்ளது. டேட்டா, வாய்ஸ் மட்டுல்லாமல், கூடுதல் சலுகையும் இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 699 திட்ட விவரங்கள் (BSNL Rs 699 Plan Details): இதுவொரு ப்ரீபெய்ட் (Prepaid) திட்டமாகும். இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், கூடுதல் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 150 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

5 மாதங்களுக்கு சலுகைகள் கிடைப்பதால், டேட்டா சலுகை குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வாய்ஸ் கால் சலுகைகளை 150 நாட்களுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால் (Roaming Call) சலுகைகளை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது.
நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். அதேபோல 500 எம்பி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த 500 எம்பிக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகையை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதுபோக பிஆர்பிடி சலுகையானது, முதல் 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆகவே, அன்லிமிடெட் வாய்ஸ் சலுகை மட்டும் போதும், டேட்டா சலுகை குறைவாகவே இருந்தாலும் பரவாயில்லை என்று கேட்கும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் சரியாக இருக்கும். கூடுதல் டேட்டா வேண்டுமானால், ரூ 997 திட்டத்துக்கு செல்லுங்கள்.

பிஎஸ்என்எல் ரூ 997 திட்ட விவரங்கள் (BSNL Rs 997 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய திட்டத்தைவிட கூடுதல் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், தினசரி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இருப்பினும், வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.
இந்த திட்டத்தை பெறும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 2 ஜிபி டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 ஜிபிக்கு பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
ஆகவே, 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும். முந்தைய திட்டத்தை போலவே 2 மாதங்களுக்கான பிஆர்பிடி (PRBT) சலுகை கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், லோக்தூன் கன்டென்ட்டை 2 மாதங்களுக்கு பயன்படுத்த முடியும். இந்த திட்டத்துக்கு 160 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
இந்த 2 திட்டங்களும் ரூ 1000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கின்றன. இதே சலுகைகளுடன் ஆண்டு முழுவதும் சலுகைகள் வேண்டுமானால், ரூ 1999 திட்டத்தை பிஎஸ்என்எஸ் கஸ்டமர்கள் தேர்ந்தெடுக்கலாம். இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ், எஸ்எஸ்எம், அதிகப்படியான டேட்டா போன்ற அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது. இதன் சலுகைகளை இப்போது பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ 1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல தினமும் 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். இதுபோக 600 ஜிபி டேட்டா மொத்தமாக கிடைக்கிறது.
இது நாளொன்றுக்கு கணக்கிட்டால், 1.64 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், இதுவொரு லம்ப்-சம் டேட்டா சலுகையென்பதால், லிமிட் இல்லாமல் பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகையை பயன்படுத்த முடியும். இதிலும் 30 நாட்களுக்கான லோக்தூன் மற்றும் பிஆர்பிடி சலுகை கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








