பட்ஜெட் விலையில் 180 நாட்கள் வேலிடிட்டி தரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அசத்தலான திட்டம்.!
தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட குறைந்த விலையில் சிறப்பான திட்டங்களையும், சலுகைகளையும் அறிமுகம் செய்து வருகறது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.699 திட்டம் ஆனது நீண்ட காலத் திட்டத்தைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக
இருக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில்
இருக்கிறது. இப்போது பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.699 திட்டத்தின் நன்மைகள்
பிஎஸ்என்எல் ரூ.699 திட்டம் ஆனது தினசரி 500MB அல்லது 0.5GB அளவிலான FUP டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்கள் ஆகும். எனவே மொத்தமாக இந்த திட்டத்தில் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கும். குறிப்பாக தினசரி FUP டேட்டாவை பயன்படுத்திய பின்னர் இணைய வேகம் 80 Kbps ஆக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த திட்டத்தில்வாடிக்கையாளர்கள் 60 நாட்களுக்கு இலவச அழைப்பாளர் டியூன் வசதியை பெறமுடியும். ஒருவேளை உங்களுக்கு கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், இந்நிறுவனத்திடம் குறைந்த விலையில் டேட்டா வவுச்சர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலிவு விலையில் கிடைக்கும் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற கால் அழைப்பு மற்றும் தினசரி 2ஜிபி டேட்டா போன்ற நன்மைகள் 60 நாட்களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன் (பிஆர்பிடி) மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவசஎஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ரூ.397 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 60 நாட்கள் வரை மட்டுமே இலவச நன்மைகள் கிடைக்கும் என்றும். மேலும் 60 நாட்கள் முடிந்த பின்பு உங்களுக்கு டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகள் வேண்டும் என்றால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பல வவுச்சர்களை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு குறிப்பிட்ட டேட்டாவை முழுவதுமாக பயன்படுத்திய பின்னர் 80 கே.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இலவச குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்கள், 18 நாட்களுக்கு ஸிங் மியூசிக் பயன்பாட்டிற்கான அணுகல் உள்ளிட்ட பல சலுகைகள் இந்த அட்டகாசமான திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த திட்டத்தின் இலவச நன்மைகள் 18 நாட்களுக்குபயன்படும் என்று பிஎஸ்என்எல் கூறியுள்ளது

பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டம்
அதேபோல் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ரூ.108 ப்ரீபெய்ட் திட்டமும் உள்ளது. இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கிறது. மேலும் இந்த ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.249 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.249 திட்டம் ஆனது தற்சமயம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 2ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications