என்ன BSNL இதெல்லாம்? இவ்வளவு கம்மி விலைக்கு 4000GB டேட்டாவா? ஒரே மாதிரி விலை ஆனா ஸ்பீட் வேற.. எந்த திட்டம்?
இந்தியாவின் முன்னணி அரசுத் தொலைத்தொடர்பு வழங்குநரான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited), இந்தியாவில் ஃபைபர்-டு-தி-ஹோம் (FTTH) துறையில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளது. இப்போது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இந்தியாவில் ரூ. 699 விலைக்கு இரண்டு பிராட்பேண்ட் திட்டங்களை 4000GB டேட்டாவுடன் வழங்குகிறது. அதாவது 4TB டேட்டா நன்மையை வழங்குகிறது. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆம், விலை ஒன்றாக இருந்தாலும் குறிப்பிட்ட சில மாற்றங்களை இந்த இரண்டு திட்டங்களும் கொண்டுள்ளன. இவற்றில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அதன் பிராட்பேண்ட் திட்டத்தின் கீழ் ரூ. 699 விலையில் இரண்டு திட்டங்களை வழங்குகிறது. இவை ஒரே டேட்டா அளவை வழங்கினாலும், வேகத்தில் வேறுபடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒன்று 100 எம்பிபிஎஸ் வேகத்தையும் மற்றும் மற்றொன்று 125 எம்பிபிஎஸ் வேகத்தையும் வழங்குகின்றன. BSNL ஒரே விலையில் வேகத்தில் ஏற்படும் இந்த மாறுபாடு, குறைந்த வேக விருப்பத்தை வாடிக்கையாளர்கள் ஏன் விரும்புவார்கள் என்பது குறித்த கேள்வியை எழுப்புகிறது.

என்ன BSNL இதெல்லாம்? இவ்வளவு கம்மி விலைக்கு 4000GB டேட்டாவா?
இது ஒவ்வொரு திட்டத்திலும் வரும் கூடுதல் நன்மைகளால் ஏற்படுகிறது என்பதே உண்மையாகும். ஸ்பீடை தவிர்த்து இரண்டு திட்டங்களிலும் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கிறது. அது என்ன என்பது இங்கே. பிஎஸ்என்எல் ரூ. 699 திட்டம் 100 எம்பிபிஎஸ் ஸ்பீட் உடன் 4TB டேட்டாவை (BSNL Rs 699 Broadband Plan) வழங்குவதோடு, இலவச ஓவர்-தி-டாப் (OTT) நன்மைகளையும் வழங்குகிறது. இது பொழுதுபோக்கு விருப்பங்களில் ஆர்வமுள்ள பயனர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான தேர்வாகும்.
பிஎஸ்என்எல் ரூ 699 திட்டம் 100Mbps மற்றும் 125 Mbps வேகம் (BSNL Rs 699 Broadband Plan With 100 Mbps and 125 Mbps Speed):
மாறாக, இந்த திட்டம் அதே ரூ. 699 விலையில் 125 எம்பிபிஎஸ் ஸ்பீட் (125 Mbps Speed) உடன் வருகிறது. இது முந்தைய திட்டத்தை விட வேகமாக இருந்தாலும், இத்திட்டம் எந்தவொரு OTT நன்மைகளையும் கொண்டிருக்காது. இரண்டு திட்டங்களும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்பு நன்மையை வழங்குகிறது. இது நிலையான தொலைபேசி இணைப்பை உள்ளடக்கியது. இருப்பினும், தொலைபேசி கருவியை பெறுவதற்கு நீங்கள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் ரூ. 799 திட்டம் (BSNL Bharat Fiber Rs 799 Plan):
இந்த திட்டங்களுக்கு கூடுதலாக, பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் மாதத்திற்கு ரூ. 799 (BSNL Bharat Fiber Rs 799 Plan) விலைக்கு ஓடிடி நன்மைகளையும் உள்ளடக்கிய மற்றொரு 125 எம்பிபிஎஸ் திட்டம் உள்ளிட்ட பல்வேறு உயர் வேக பிராட்பேண்ட் விருப்பங்களை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் ஒரு நடுநிலையை குறிக்கிறது. அதிக வேகம் மற்றும் பொழுதுபோக்கு நன்மைகளை வழங்குகிறது. பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை இப்போது வெளியிடுகிறது.
மார்ச் 31, 2025 வரை மட்டும் இலவச இன்ஸ்டாலேஷன்:
புதிய சந்தாதாரர்களை ஈர்க்கும் வகையில், இப்போது இந்தியா முழுக்க புதிதாக பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவை இணைப்பை பெரும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல், இலவச இன்ஸ்டாலேஷன் சேவையை BSNL வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த இலவச இன்ஸ்டாலேஷன் வரும் மார்ச் 31, 2025 வரை மட்டுமே அணுக கிடைக்கும் என்றும் BSNL அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் ப்ராட்பேண்ட் இணைப்பைத் தேர்ந்தெடுக்க சிறந்த மற்றும் மலிவான நேரம் இதுவாகும்.
BSNL 4G சேவை:
பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது இந்தியாவில் பல இடங்களில் தனது பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவையை வழங்குவதால், வைஃபை சேவை தேவைப்படும் மக்களும் கூட, இப்போது குறைந்த விலையில் 125 Mbps வேகம் வரை மலிவு விலையில் கிடைப்பதனால், பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவைக்கு மாறத்துவங்கியுள்ளனர். நீங்களும் மலிவு விலையியல் ஒரு சிறந்த சேவையை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இந்த திட்டங்களை பயன்படுத்தி பயன்பெறலாம்.


Click it and Unblock the Notifications