Home
News

குதூகலப்படுத்திய BSNL.. 215 நாள் வேலிடிட்டி.. இரண்டு கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக நன்மை.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை நன்மைகளை அதிகரித்துள்ளது. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ரூ.699 மற்றும் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டி-ஐ தான் அதிகரித்துள்ளது. இப்போது இந்த இரண்டு திட்டங்களின் நன்மைகள் குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 699 Plan) ஆனது முன்பு 130 நாட்கள் தான் வேலிடிட்டி வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 150 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 0.5ஜிபி டேட்டா, முதல் 60 நாட்களுக்கு இலவச PRBT சேவை மற்றும் பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

குதூகலப்படுத்திய BSNL.. கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக நன்மை!

பிஎஸ்என்எல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 999 Plan) ஆனது முன்பு 200 நாட்கள் வேலிடிட்டி வழங்கி வந்தது. ஆனால் தற்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 215 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், இரண்டு மாதங்களுக்கு இலவச PRBT சேவை வழங்கும் இந்த திட்டம். ஆனால் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் வழங்கப்படவில்லை.

அதேபோல் நாட்டில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 5ஜி, 4ஜி சேவையை வழங்கி வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்களின் 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது வரை 4ஜி சேவையை வழங்கவில்லை. ஆனாலும் பிஎஸ்என்எல் விரைவில் 4ஜி சேவையை வழங்க உள்ளது.

குதூகலப்படுத்திய BSNL.. கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக நன்மை!

சரியாக சொல்ல வேண்டும் என்றால் வரும் ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்எனஎல் நிறுவனம் 4ஜி சேவையைத் தொடங்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியா முழுவதும் 7700 க்கும் மேற்பட்ட 4ஜி டவர்கள் தயாராகி வருகின்றன எனத் தகவல் வெளிவந்துள்ளது.

அதுவும் நாட்டில் உள்ள 2ஜி மற்றும் 3ஜி டவர்கள் அனைத்து தற்போதும் 4ஜி டவர்களாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர புதிய 4ஜி டவர்களும் நிறுவப்பட்டுள்ளன என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக வட மாநிலங்கள் மற்றும் தமிழ்நாடு (Tamilnadu), ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) மற்றும் தெலுங்கானா (Telangana) ஆகிய மாநிலங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை வழங்க உள்ளது.

குதூகலப்படுத்திய BSNL.. கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக நன்மை!

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் பிரவின் குமார் புர்வார் தெரிவித்தது என்னவென்றால், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் பிற பகுதிகளுக்கு கூடிய விரைவில் 4ஜி சேவைகள் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதுவும் தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 699 and Rs 999 plans validity has been increased: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X