200ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய திட்டம்: வேலிடிட்டி?

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து ஜியோ நிறுவனத்திற்கு போட்டி கொடுக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது புதிய ரூ.698-திட்டத்தை அறிவித்துள்ளது.

 200ஜிபி டேட்டா

200ஜிபி டேட்டா

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த புதிய ரூ.698-திட்டத்தில் பயனர்களுக்கு 200ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, பின்புஇந்த திட்டத்தில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவை வழங்கப்படவில்லை. முதற்கட்டமாக இந்த
திட்டம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கிடைக்கிறது. விரைவில் மற்ற வட்டாரங்களிலும் இந்ததிட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகலாம்.

180-நாட்கள் செல்லுபடியாகும்

180-நாட்கள் செல்லுபடியாகும்

புதிய ரூ.698-திட்டம் 180-நாட்கள் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் பிஎஸ்என்எல் ரூ.698 சலுகை நவம்பர் 15-ஆம்தேதி வரை மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதாவதுநவம்பர் 15-ம் தேதிக்குள் ரீசார் செய்தால் மேலே குறிப்பிட்டுள்ள 200ஜிபி டேட்டா சலுகை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இதற்குமுன்பு அறிவித்த திட்டங்களைப் பார்ப்போம்.

'ஏரியா 51 ஏலியன்கள், நிலவில் மனிதர்கள்' பற்றிய உண்மையை போட்டுடைத்த எட்வர்ட் ஸ்னோடென்!'ஏரியா 51 ஏலியன்கள், நிலவில் மனிதர்கள்' பற்றிய உண்மையை போட்டுடைத்த எட்வர்ட் ஸ்னோடென்!

 455நாட்கள்

455நாட்கள்

பிஎஸ்என்எல் நிறுவனம் 455நாட்களுக்கான ப்ரீபெய்ட் திட்டத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது, குறிப்பாக ஒரு வருடத்திற்கான திட்டம் (ரூ.1699) என்றாலும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்யும் நபர்களுக்கு கூடுதலாக 90நாட்கள் வேலிடிட்டியை வழங்கி 455நாட்கள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சிறப்பு சலுகையை வழங்கி இருக்கிறது பிஎஸ்என்எல்.

ரூ.1699ரூபாய்க்கு ரீசார்ஜ்

ரூ.1699ரூபாய்க்கு ரீசார்ஜ்

அதன்படி பயனர்கள் ரூ.1699ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் பேசிக்கொள்ளலாம். மேலும் நாள் ஒன்றுக்கு வேலிடிட்டி முடியும் வரை 100 மெசேஜ்கள் அனுப்பிக் கொள்ளலாம்.

சாதாரண வாகனங்களை ஸ்மார்ட் காராக மாற்றுவது எப்படி?சாதாரண வாகனங்களை ஸ்மார்ட் காராக மாற்றுவது எப்படி?

 ரிங் பேக் டோன்

ரிங் பேக் டோன்

அதன்பின்பு 365நாட்களுக்கு ரிங் பேக் டோன் அல்லது காலர் ட்யூன்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்கிறது இந்த அருமையான ரிசார்ஜ் திட்டம். பின்பு இந்த மாதத்தின் துவகத்தில் இருந்து விழாக்கள் அதிகப்படியாக கொண்டாடப்பட்டு வருவதால் பயனர்களுக்கு கூடுதலாக 1.5ஜிபி டேட்டாவை இந்த மாதம் முழுவதும் பிஎஸ்என்எல் வழங்கிவருகிறது. அதேபோல் அடுத்த மாதமும் அதற்கடுத்த மாதமும் கூடுதலாக 1ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் வழங்குகிறது எனத் தகவல் தெரிவிக்க்பபட்டுள்ளது.

 மக்களிடையே வரவேற்ப்பு இருக்கும்

மக்களிடையே வரவேற்ப்பு இருக்கும்

அன்மையில் பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோ,ஏல்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களுக்கு போட்டிக் கொடுக்கும் வகையில் பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது. கண்டிப்பாக பிஎஸ்என்எல் அறிவிக்கும் இந்த புதியசலுகைகளுக்கு மக்களிடையே வரவேற்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Rs. 698 Prepaid Plan Launched, Offers 200GB Data for 180 Days: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X