அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே: 300ஜிபி, 500ஜிபி டேட்டா.! வேலிடிட்டி? பிஎஸ்என்எல் அதிரடி.!
இந்த ஆண்டு துவக்கம் முதல் பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் இந்நிறுவனம் சில வட்டங்களில் அதன் போர்ட்ஃபோலியோவின் கீழ் தனிப்பட்ட
டேட்டா ஒன்லி திட்டங்களை கொண்டுள்ளது, அதைப் பற்றி விரிவாகப் பார்போம்.

ரூ.693 மற்றும் ரூ.1,212 திட்டங்கள்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் டேட்டா ஒன்லி எஸ்.டி.வி திட்டங்கள், ரூ.693 மற்றும் ரூ.1,212 என்கிற விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். தினசரி டேட்டா வரம்பைக் கொண்ட பிஎஸ்என்எல் ஆனது மற்ற டேட்டா எஸ்.டி.விகளைப் போலல்லாமல் ரூ.693 மற்றும் ரூ.1,212 திட்டங்கள் ஆனது ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து சரியாக 365நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்தின் கீழ் டேட்டா நன்மையை வழங்கும் என்பதே உண்மை ஆகும். மேலும் இந்த திட்டங்களைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்.

ரூ.693 ப்ரீபெய்ட் டேட்டா எஸ்.டி.வி திட்டம்
இந்த ரூ.693 ப்ரீபெய்ட் டேட்டா எஸ்.டி.வி திட்டம் ஆனது மொத்தம் 300ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும், பின்பு 365நாட்கள் வேலிடிட்டி-ஐ அடிப்படையாக கொண்டு இந்த திட்டம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடததக்கது. கண்டிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

ரூ.1,212 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.1,212 திட்டம் ஆனது மொத்தம் 500ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டம் 365நாட்கள் வேலிடிட்டியுடன் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.693 மற்றும் ரூ.1,212 திட்டங்களில் எந்த விதமான குரல் அழைப்பு நன்மைகளோ, எஸ்எம்எஸ்நன்மைகளோ வழங்கப்படமாட்டாது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், வெறுமனே டேட்டா நன்மைகளை மட்டுமேவழங்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கின்றன
வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த இரண்டு டேட்டா எஸ்.டி.விகள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கின்றன. அதன்படி இந்த திட்டங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டத்தில் இந்த திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள லாக்வுடன் காலத்தில் ஏராளமான பயனர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் மற்றும் சில பயனர்கள் மொபைல் டேட்டாவை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். இந்த சமயத்தில் இதுபோன்ற ஒரு வருடம் செல்லுபடியாகும் திட்டங்களை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கக்கூடிய பிற டேட்டா எஸ்.டி.விகளைப் பொறுத்தவரை, வெறும் ரூ.16-இல்துவங்கி ரூ.1,498-வரை செல்கிறது. இந்த பட்டியலில் ஒரு அருமையான திட்டம் உள்ளது, அது ரூ.551 டேட்டா எஸ்.டி.வி திட்டம் ஆகும், இந்த திட்டம் ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டாவை வழங்குகிறது, மேலும் 90நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications