பிஎஸ்என்எல் சிக்ஸர் பேக் "3.7 ஜிபி" தினமும்.! விலை எவ்வளவு தெரியுமா?
பிஎஸ்என்எல் தன்னுடைய பயனர்களுக்கு சூப்பர் சிக்ஸர் சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
பிஎஸ்என்எல் தன்னுடைய பயனர்களுக்கு சூப்பர் சிக்ஸர் சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு வரும் ரூ.666 இல் ஒரு நாளைக்கு 3.7 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
இந்த புதிய பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம் மூன்று மாத வேலிடிட்டியுடன் வருகிறதென்பது கூடுதல் மகிழ்ச்சி.

'சிக்ஸர்'
பிஎஸ்என்எல் ரூ.666 'சிக்ஸர்' ப்ரீபெய்ட் திட்டம், பயனர்களுக்கு 477 ஜிபி டேட்டா சேவையை மூன்று மாத வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

கூடுதல் தினசரி டேட்டா
பிஎஸ்என்எல் தனது ப்ரீபெய்ட் சந்தாதார்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய சலுகை திட்டத்தின் மூலம், தற்போதுள்ள ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைக்கு மேல் 2.2 ஜிபி கூடுதல் தினசரி டேட்டா வழங்குகின்றது. பிஎஸ்என்எல் இன் ரூ.666 சிக்ஸர் ப்ரீபெய்ட் திட்டம் ஒவ்வொரு நாளும் 3.7ஜிபி டேட்டா அனுபவத்தை வழங்குகிறது.

477.3 ஜிபி டேட்டா
129 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டம் பயனர்களுக்கு மொத்தம் 477.3 ஜிபி டேட்டா சேவையை வழங்குகிறது. இத்திட்டத்தில் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ், 12,900 உள்ளூர் மற்றும் தேசிய வாய்ஸ் கால்ஸ் சேவை, இலவச ரோமிங் என பல சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

பிஎஸ்என்எல் விலை பட்டியல்:
- ரூ.186 திட்டம் / 3.2 ஜிபி டேட்டா ஒரு நாளைக்கு / 81 நாள் வேலிடிட்டி
- ரூ.429 திட்டம் / 3.2 ஜிபி டேட்டா ஒரு நாளைக்கு / 81 நாள் வேலிடிட்டி
- ரூ.485 திட்டம் / 3.7 ஜிபி டேட்டா ஒரு நாளைக்கு / 90 நாள் வேலிடிட்டி
- ரூ.999 திட்டம் / 3.2 ஜிபி டேட்டா ஒரு நாளைக்கு / 181 நாள் வேலிடிட்டி


Click it and Unblock the Notifications