Home
News

BSNL ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்.. 105 நாட்களுக்கு கவலை இருக்காது.. எவ்வளவு டேட்டா? என்னென்ன நன்மைகள்?

தனியார் டெலிகாம் (Telecom) நிறுவனங்களின் விலை உயர்வு அறிவிப்பின் மூலம் தற்போது அதிக வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர். அதேபோல் வரும் அக்டோபர் மாதம் பிஎஸ்என்எல் நிறுவனம் அதிக இடங்களில் 4ஜி சேவையை வழங்கும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே பல வாடிக்கையாளர்கள் இப்போதே பிஎஸ்என்எல் சிம் கார்டை வாங்க தொடங்கிவிட்டனர்.

அதேபோல் தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில் அதிக டேட்டா மற்றும் அதிக வேலிடிட்டி திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதன்படி இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் அதிக வேலிடிட்டி மற்றும் டேட்டா நன்மையை வழங்கும் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

BSNL ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்.. 105 நாட்களுக்கு கவலை இருக்காது..

பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 666 prepaid recharge plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் 105 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்தப்ரீபெய்ட் திட்டம். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதன்படி அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திடத்தில் கிடைக்கும்.

குறிப்பாக பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL tune), ஆஸ்ட்ரோடெல் (Astrotell) போன்ற நன்மைகளையும் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் 105 நாட்கள் வேலிடிட்டி விட அதிக வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

பிஎஸ்என்எல் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 prepaid recharge plan) ஆனது 160 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 320ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்.. 105 நாட்களுக்கு கவலை இருக்காது..

அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ப்ரீபெய்ட் திட்டம்.

அதன்படி ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 666 prepaid recharge plan with 105 days validity, 2GB data per day:check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X