பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய சலுகை: தினசரி 3ஜிபி டேட்டா.! என்ன திட்டம்? வேலிடிட்டி?
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து ஜியோ நிறுவனத்திற்கு போட்டியா புதிய சலுகைகள் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு புதிய புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. தற்சமயம் இந்நிறுவனம் அனைவருக்கும் பயன்படும் வகையில்
ஒரு சலுகையை அறிவித்துள்ளது.

சிக்ஸர் திட்டம்
பிஎஸ்என்எல நிறுவனம அதன் ரூ.666-ப்ரீபெய்ட் திட்டத்தை திருத்தியுள்ளது, அதன்படி இது பிஎஸ்என்எல்-ன் சிக்ஸர் திட்டம்என்றும் அழைக்கப்படுகிறது. முன்னதாக இந்த திட்டத்தில் 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வந்த நிலையில், தற்போது கூடுதலாக 1ஜபி அளவிலான டேட்டாவுடன் மொத்தம் 3ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்
குறிப்பாக பிஎஸ்என்எல் கூடுதலாக வழங்கும் இந்தத 1ஜிபி டேட்டாவனது டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பின் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு வழக்கமான 2ஜிபி அளவிலான தினசரி டேட்டாவே கிடைக்கும்.

134நாட்கள் வேலிடிட்டி
2019-ம் ஆண்டு துவகத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த சிக்ஸர் ரூ.666-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 122நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால தற்போது இந்த திட்டம் 134நாட்கள் என்கிற வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற சலுகைகளைப் பற்றி பேசுகையில்..
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.666-ப்ரீபெய்ட் திட்டத்தின் மற்ற சலுகைகளைப் பற்றி பேசுகையில், இந்த திட்டமானதுபயனர்களுக்கு இலவச குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது, ஆனால் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்கிறவரம்பினை கொண்டுள்ளது, இதனுடன் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகளையும் பெறமுடியும்.

அனைத்து பிஎஸ்என்எல் வட்டங்களிலும் கிடைக்கும்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திருத்தப்பட்ட ரூ.666-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டிசம்பர் 23-ம் தேதி(இன்று) முதல் நடைமுறைக்கு வரும். இது அனைத்து பிஎஸ்என்எல் வட்டங்களிலும் கிடைக்கும் என ஆன்லைனில் தகவல் கிடைத்துள்ளது.

ரூ.109-ப்ரீபெய்ட் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது
இதுதவிர பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.109-ப்ரீபெய்ட் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் 90நாட்கள்என்கிற வேலிடிட்டியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த திட்டம் மித்ரம் பிளஸ் என்று அழைக்கப்டுகிறது. அதாவது
இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 5ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். பின்பு இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் 250 நிமிடங்கள் என்கிற அழைப்பு நன்மைகளும் உள்ளது. குறிப்பாக கொடுக்கப்பட்ட வாய்ஸ்
நிமிடங்களள் தீர்ந்தவுடன், பயனர்கள் ஆன்-நெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளுக்கு வினாடிக்கு 1.2பைசா என்கிற கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications