BSNL பிளஸ் பிளான்.. ரூ.699 போதும்.. OTT சந்தா.. 3300GB டேட்டா.. 60 எம்பிபிஎஸ் வேகம்.. லேண்ட்லைன் கனெக்சன்!
பிஎஸ்என்எல்லின் ரூ.699 திட்டத்தில் (BSNL Rs 666 Plan) அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்கள், 60 எம்பிபிஎஸ் வேக இன்டர்நெட், 3300 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தின் சப்ஸ்கிரிப்ஷனும் வழங்கப்படுகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
பிஎஸ்என்எல் ரூ 666 திட்ட விவரங்கள் (BSNL Rs 666 Plan Details): இதுவொரு பிராட்பேண்ட் திட்டமாகும் (Broadband Plan). இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data), லேண்ட்லைன் கனெக்சன் (Landline Connection) மற்றும் ஓடிடி (OTT) சலுகைகள் வழங்கப்படுகிறது.

அதாவது, இந்த திட்டத்தின் மூலம் 60 எம்பிபிஎஸ் (60 Mbps) வேகத்தில் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். மொத்தமாக 3300 ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்படும். இந்த டேட்டாவை முழுமையாக பயன்படுத்திவிட்டாலும், 4 எம்பிபிஎஸ் (4 Mbps) வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதோடு லேண்ட்லைன் கனெக்சன் மூலம் ப்ரீ அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் (Free Unlimited Voice Calling) சலுகை வழங்கப்படுகிறது. இதில் லோக்கல் மற்றும் எஸ்டி கால்களை தவிர இன்டர்நேஷனல் கால்களை செய்தால் நிமிடத்துக்கு ரூ.1.20 வசூலிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களாகும். இதைவிட கம்மி விலையில் மற்றொரு திட்டம் உள்ளது.
பிஎஸ்என்எல் ரூ 599 திட்ட விவரங்கள் (BSNL Rs 599 Plan Details): இந்த ஃபைபர் பேஸிக் பிளஸ் (Fibre Basic Plus) திட்டத்துக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் 60 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 3300 ஜிபி டேட்டா ஒதுக்கப்படும். இந்த டேட்டாவை 30 நாட்கள் வேலிடிட்டிக்கு முன்னதாகவே பயன்படுத்திவிட்டால், முந்தைய திட்டத்தைப் போலவே மீதம் உள்ள வேலிடிட்டி நாட்களில் 4 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுக்கான கனெக்சன் கொடுக்கப்படும். ஆனால், அதற்கான செலவை தனியாக வாடிக்கையாளர்கள் கொடுக்க வேண்டும். மேற்கூறிய 2 திட்டங்களையும்விட கூடுதல் டேட்டா, ஓடிடி தளங்கள் மற்றும் வேகம் வேண்டுமானால், ரூ 999 விலையில் பக்காவான மற்றொரு திட்டம் உள்ளது.
பிஎஸ்என்எல் ரூ 999 திட்ட விவரங்கள் (BSNL Rs 999 Plan Details): இந்த பிராட்பேண்ட் திட்டமானது, ரூ.1000க்கும் கீழ் கிடைக்கும் திட்டங்களிலேயே அதிவேக இன்டர்நெட் சலுகையை கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் நாள்தோறும் 150 எம்பிபிஎஸ் (150 Mbps) வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மொத்தமாக 2000 ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்படும். இது கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 66.6 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. இருப்பினும், ஒரே நாளில் எவ்வளவு டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். அப்படி 2000 ஜிபி டேட்டாவை 30 நாட்கள் வேலிடிட்டிக்கு முன்பே பயன்படுத்திவிட்டால், மீதமுள்ள நாட்களில், 10 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம்.
இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி சலுகைகள் கொண்ட லேண்ட்லைன் கனெக்சன் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், லையன்ஸ் கேட் (Lions Gate), ஹங்கமா பிளே (Hungama Play), ஹங்கமா மியூசிக் (Hungama Music), சோனிலிவ் பிரீமியம் (SonyLIV Premium), ஜீ5 பிரீமியம் (Zee5 Premium) மற்றும் யூப் டிவி (YuppTV) ஆகிய தளங்களின் 30 நாட்களுக்கான சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications








