Home
News

ஆட்டத்தை ஆரம்பித்து BSNL.. மலிவு விலையில் 105 நாள் பேக்.. தினமும் 2GB 4G டேட்டா.. அசத்துது.. எந்த பிளான்?

மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது அதன் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது போல் தெரிகிறது. சமீபத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்றழைக்கப்படும் கோடபோனே ஐடியா (Vodafoneidea) போன்ற நிறுவனங்களின் திடீர் விலை ஏற்றம் காரணமாக பல லட்சம் வாடிக்கையாளர்களை தனியார் நிறுவனங்கள் இழந்தன. இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் ஈர்க்க தனியார் நிறுவனங்கள் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதை சமாளிக்கும் விதத்தில், BSNL-ம் கூட பல அட்டகாசமான திட்டங்களை அறிமுகம் செய்யத்துவங்கியுள்ளது.

அப்படி அறிமுகம் செய்யப்பட்ட புதிய திட்டத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ஒரே நிறுவனமாக தற்போது பிஎஸ்என்எல் (BSNL) மட்டுமே திகழ்வதால், மக்கள் இப்போது பிஎஸ்என்எல் பக்கம் மாறத் துவங்கியுள்ளனர். மக்கள் குறைந்த பட்ஜெட்டில் அதிக நன்மை கிடைத்தால் போதும் என்று நினைப்பதனால், BSNL நிறுவனமும் கூட, பல பட்ஜெட் பிரெண்ட்லி திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.

ஆட்டத்தை ஆரம்பித்து BSNL.. மலிவு விலையில் 105 நாள் பேக்.. தினமும் 2GB

ஆட்டத்தை ஆரம்பித்து BSNL.. மலிவு விலையில் 105 நாள் பேக்:

இந்த நோக்கத்தில், பட்ஜெட் பிரியர்களை கருத்தில் வைத்து BSNL அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் தான் பிஎஸ்என்எல் ரூ. 666 திட்டம் (BSNL Rs 666 Plan). இந்த புதிய திட்டத்தை BSNL நிறுவனம் 105 நாள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இந்த திட்டம் குறிப்பாக பிஎஸ்என்எல் பயனர்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை என்ற டென்சன் ஃப்ரீ பலனை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் BSNL நிறுவனம் என்ன-என்ன நன்மைகளை வழங்குகிறதென்று பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ. 666 திட்டம் (BSNL Rs 666 Plan):

இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ. 666 திட்டம் (BSNL Rs 666 Plan) திட்டம், இந்தியா முழுவதும் உள்ள அணைத்து நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை முழுமையாக 105 நாட்களுக்கும் கிடைக்கிறது. கூடுதலாக, இந்த திட்டம் தினசரி 2ஜிபி அதிவேக 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தமாக 210GB டேட்டா நன்மையை வழங்கி அசத்துகிறது.

பிஎஸ்என்எல் பயனர்கள் தங்கள் தினசரி வரம்பை மீறினால், கூடுதல் கட்டணம் இல்லாமல் டேட்டா வேகம் 40 kbps ஆக குறையும். இந்தத் திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் கிடைக்கிறது. இந்தத் திட்டம் குறிப்பாக மாணவர்கள், தொலைதூரப் பணியாளர்கள் மற்றும் டேட்டா நுகர்வு அதிகமாக இருக்கும் கிராமப்புற மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பிஎஸ்என்எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பிஎஸ்என்எல் ரூ. 666 திட்டம் (BSNL Rs 666 Plan) திட்டம் சிறந்த தேர்வாக அமைகிறது. மற்ற டெலிகாம் நிறுவனங்கள் இந்த விலையில், இவ்வளவு அதிக நாள் செல்லுபடியாகும் காலத்தை வழங்குவதில்லை, அதேபோல், இத்துடன் கிடைக்கும் நன்மைகள் போன்றதையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 666 Plan With 2GB Data Unlimited Voice Calls 100 SMS For 105 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X