BSNL ஆட்டம்.. மாதம் ரூ.166 போதும்.. 105 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!
மாதத்துக்கு வெறும் ரூ.166 செலவில் 105 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை வழங்கும் திட்டத்துக்கு கூடுதலாக 3ஜிபி போனஸ் டேட்டா கொடுக்கப்படுகிறது. இதேபோல 5 திட்டங்களில் போனஸ் டேட்டா கிடைக்கிறது. லிஸ்ட் இதோ.
பிஎஸ்என்எல் ரூ 299 திட்ட விவரங்கள் (BSNL Rs 299 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) வாய்ஸ் கால் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அதோடு நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகவே, மொத்தமாக 90 ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இந்த 3 ஜிபிக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ 398 திட்ட விவரங்கள் (BSNL Rs 398 Plan Details): இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் அதிகபட்சமாக 120 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு தினசரி லிமிட் கிடையாது. ஆகவே, ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
இந்த 120 ஜிபிக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா வேகம் குறைக்கப்படும். இருப்பினும், அன்லிமிடெட் டேட்டா தொடர்ந்து கொடுக்கப்படும். அதோடு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. அதே போல 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ 499 திட்ட விவரங்கள் (BSNL Rs 499 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 2 ஜிபி தினசரி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல 100 எஸ்எம்எஸ் சலுகை வழங்கப்படுகிறது.

இந்த 2ஜிபிக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்தில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 5 மணி வரையில் ப்ரீ நைட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு ஜிங்க் (Zing) பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell) ஆகியவற்றை பயன்படுத்தலாம். இந்த திட்டத்துக்கு 75 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 599 திட்ட விவரங்கள் (BSNL Rs 599 Plan Details): இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு நளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இந்த 3ஜிபிக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம்.
இந்த சலுகைகள் போக நள்ளிரவு 12 மணி முதல் காலை 5 மணி வரையில் அன்லிமிடெட் ப்ரீ நைட் டேட்டா (Unlimited Free Night Data) சலுகை கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஜிங்க், பிஆர்பிடி மற்றும் ஆஸ்ட்ரோடெல் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ 666 திட்ட விவரங்கள் (BSNL Rs 666 Plan Details): இந்த திட்டத்தில் பட்டையை கிளப்பும் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 210 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும்.
இந்த 2 ஜிபி லிமிட் முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா வழங்கப்படுகிறது. முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல 100 எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. இதுபோக பிஎஸ்என்எல் டியூன்ஸ், ஜிங்க் மியூசிக் மற்றும் ஆஸ்ட்ரோடெல் பயன்படுத்தலாம். இந்த திட்டத்துக்கு 105 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








