Home
News

BSNL ரூ.628 ப்ரீபெய்ட் திட்டம்.. தினமும் 3GB டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா நன்மைகளை வரும் நிறையத் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல். எனவே தான் இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பயனர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுவந்து அதிக வேலிடிட்டி மற்றும் அதிக நன்மைகளை வழங்கி உள்ளது. இப்போது பிஎஸ்என்எல் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரவாகப் பார்க்கலாம்.

BSNL ரூ.628 ப்ரீபெய்ட் திட்டம்.. தினமும் 3GB டேட்டா.. வேலிடிட்டி?

பிஎஸ்என்எல் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 628 Prepaid Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.628 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதன்படி சேலஞ்சர் அரினா (Challenger Arena), ஹார்டி கேம்ஸ் (Hardy Games), ஜிங்க்(Zing) பிஎஸ்என்எல் டியூன், ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டம்.

குறிப்பாக அதிக டேட்டா, அதிக நாள் வேலிடிட்டி மற்றும் எக்கச்சக்க சலுகைகள் இந்த பிஎஸ்என்எல் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் சில கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 239 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக ஒரு மாதம் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 62ஜிபி வரை டேட்டாவை பெற முடியும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ், ரூ.10 மதிப்பிலான டால்க் வேல்யூ உள்ளிட்ட பல நன்மைகள் இதில் கிடைக்கிறது.

BSNL ரூ.628 ப்ரீபெய்ட் திட்டம்.. தினமும் 3GB டேட்டா.. வேலிடிட்டி?

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்(BSNL RS 299 Prepaid Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்கும். 30 நாட்கள வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.

குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆனால் ஓடிடி நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 628 Plan Offers Unlimited Voice Calls, 252GB Data, 84 Days Validity: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X