கேபிள் TV, DTH கதை முடிந்தது.. IFTV-க்கு 600 டிவி சேனல்கள்.. BSNL சில்வர் ஜூபிலிக்கு 127 பிரீமியம் சேனல்கள்!
கேபிள் டிவி, டிடிஎச் சேவைகள் இல்லாமலேயே பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ஐஃஎப்டிவி (IFTV) வழியாக லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த பிஎஸ்என்எல் சில்வர் ஜூபிலி திட்டத்தின் (BSNL Silver Jubilee Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கேபிள் டிவிக்கு நேரடியாக கனெக்சன் கொடுக்க வேண்டும். அதேபோல டிடிஎச் வழியாக டிவி சேனல்களை பார்க்க டிஷ் தேவைப்படும். ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுக்கும் ஐஃஎப்டிவி (IFTV) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த இன்ட்ராநெட் ஃபைபர் டிவி (Intranet Fiber TV) சேவைக்கு ஏதும் தேவையில்லை. பிஎஸ்என்எல் ஃபைபர் டூ தி ஹோம் (Fiber to the Home) போதுமானது.

இதுவொரு ஃபைபர் திட்டமாக இருப்பதால், லைவ் டிவி சேனல்கள் மட்டும் கொடுக்கப்படாது. ஃபைபர் டேட்டா (Fiber Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் ஓடிடி சந்தா (OTT) ஆகியவை கொடுக்கப்படும். அதிலும் லைவ் டிவி சேனல்களுக்கு (Live TV Channels) கூடுதல் கட்டணங்கள் கிடையாது. 127 பிரீமியம் டிவி சேனல்களும் இதில் கிடைக்கின்றன. பிஎஸ்என்எல் சில்வர் ஜூபிலி திட்டமாக இதில் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ 625 திட்ட விவரங்கள் (BSNL Rs 625 Plan Details): இந்த ஃபைபர் டூ தி ஹோம் திட்டத்துக்கு 1 மாதம் வேலிடிட்டி கிடைக்கிறது. இதுபோக 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள் வேலிடிட்டியும் இருக்கிறது. அதிகபட்சமாக 24 மாதங்களுக்கும் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு மொத்தமாக 4 சலுகைகள் கொடுக்கப்படுகிறது.
1. இந்த ஃபைபர் திட்டத்துக்கு 75 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படும். ஒரு மாதத்தில் 2500 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். 6 மாதங்களுக்கு வேலிடிட்டி பெறும்பட்சத்தில் ஒவ்வொரு மாதத்துக்கும் 2500 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு பிறகு 4 எம்பிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது.
2. அன்லிமிடெட் லோக்கல் வாய்ஸ் கால்கள் (Unlimited Local Voice Calls) மற்றும் எஸ்டிடி கால்கள் (STD Calls) கொடுக்கப்படுகிறது. ஆனால், இதற்கான டிவைஸ்களை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், வாங்கி கொள்ளலாம். இந்த திட்டத்தில் கொடுக்கப்படாது. இதற்கு அடுத்து லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி சந்தா இருக்கிறது.
3. லைவ் டிவி சேனல்களின் சந்தாவை பார்க்கையில், 600+ லைவ் டிவி சேனல்களின் சலுகையும் அதில் 127 பிரீமியம் சேனல்களும் கொடுக்கப்படுகிறது. இதற்கு கேபிள் டிவி மற்றும் டிடிஎச் போல தனியாக கனெக்டிவிட்டி தேவையில்லை. ஃபைபர் வழியாகவே பார்த்து கொள்ளலாம். அதேபோல இன்டர்நெட்டும் இந்த டிவி சேனல்களுக்கு தேவையில்லை.
4. இந்த ஃபைபர் திட்டத்தில் கிடைக்கும் ஓடிடி ஆப்களின் சந்தாவுக்கு இன்டர்நெட் தேவைப்படும். ஆகவே, 75 எம்பிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும் 2500 ஜிபி டேட்டாவை இதற்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் சோனிலிவ் (SonyLIV) ஆகிய 2 ஓடிடி ஆப்களின் சந்தா மட்டுமே இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது.
இதே திட்டத்தை 6 மாதங்களுக்கு பெற வேண்டுமானால், ரூ.3594 விலை கொடுத்து பெற்று கொள்ளலாம். ஜிஎஸ்டி உள்ளிட்ட கூடுதல் கட்டணங்கள் இருக்கலாம். இதில் 74 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். ஆனால், 4000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆகவே, ஓடிடி, டிவி சேனல்கள், வாய்ஸ் கால்கள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








