Home
News

கேபிள் TV, DTH-க்கு கும்பிடு.. 600 டிவி சேனல்கள்.. 127 பிரீமியம் சேனல்கள்.. 2 OTT சந்தா.. BSNL சில்வர் ஜூபிலி!

கேபிள் டிவி, டிடிஎச் சந்தாவை தூக்கி சாப்பிடும்படி பிஎஸ்என்எல் சில்வர் ஜூபிலி திட்டத்தில் (BSNL Silver Jubilee Plan) 600 லைவ் டிவி சேனல்கள், 127 பிரீமியம் டிவி சேனல்கள், 2 ஓடிடி சந்தா மட்டுமல்லாமல், 2500 ஜிபி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த எப்டிடிஎச் திட்டத்தின் முழு சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 25ஆவது ஆண்டு சலுகையாக இந்த திட்டம் கிடைக்கிறது. எப்டிடிஎச் ((FTTH) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த ஃபைபர் டூ தி ஹோம் (Fibre to the Home) திட்டத்தில் ஃபைபர் டேட்டா (Fiber Data), அன்லிமிடெட் கால்கள் (Unlimited Calls), லைவ் டிவி சேனல்கள் (Live TV Channels) மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படும்.

கேபிள் TV, DTH-க்கு கும்பிடு.. 600 டிவி சேனல்.. 127 பிரீமியம் சேனல்!

பிஎஸ்என்எல் ரூ 625 திட்ட விவரங்கள் (BSNL Rs 625 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 75 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கும். ஒரு மாதத்துக்கு 2,500 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த வரம்புக்கு பிறகு 4 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கும். இதை வாய்ஸ் கால்கள் செய்யவும் பயன்படுத்தலாம்.

ஆனால், அதற்கான டிவைஸ் கஸ்டமர்களிடம் இருக்க வேண்டும். இதில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி கால்கள் (STD) கிடைக்கும். இந்த டேட்டா சலுகை போல ஐபிடிவி (IFTV) வழியாக 600+ லைவ் டிவி சேனல்களில் சலுகையை பெற்று கொள்ளலாம். இதில் 127 பிரீமியம் சேனல்களும் கிடைக்கிறது. இதுபோக ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும்.

இந்த சந்தாவில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் சோனிலிவ் (SonyLIV) ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகள் 1 மாதத்துக்கு கொடுக்கப்படும். இதில் 6 மாதங்கள், 12 மாதங்கள் மற்றும் 24 மாதங்களுக்கும் வேலிடிட்டி கிடைக்கும். அதற்கு ஏற்ப திட்டத்தின் விலை மற்றும் ஜிஎஸ்டி கட்டணங்கள் இருக்கும். இதில் டிவி சேனல்கள் இலவமாக கிடைக்கிறது.

ஆகவே, கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சந்தாவுக்கு மாற்றாக இருக்கிறது. அதே நேரத்தில் ஃபைபர் டேட்டாவையும் கொடுத்து இருக்கிறது. இதைவிட அதிக டேட்டா சலுகை வேண்டுமானால், பிஎஸ்என்எல் நிறுவனம் ஃபைபர் பேசிக் பிளஸ் (Fiber Basic Plus) திட்டம் கிடைக்கிறது. இதில் ஓடிடி சலுகைகளும் இருக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 699 திட்ட விவரங்கள் (BSNL Rs 699 Plan Details): இந்த ஃபைபர் திட்டம் முந்தைய திட்டத்தைவிட ரூ.74 மட்டுமே விலை கூடுதலாக இருக்கிறது. இந்த விலைக்கே 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகையை கொடுக்கிறது. இந்த வேகத்தில் 4,000 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.

ஆகவே, 4 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். முந்தைய திட்டத்தில் பார்த்த அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்கள் இந்த திட்டத்துக்கும் கிடைக்கிறது. அதேபோல லைவ் டிவி சேனல்களை பயன்படுத்தி கொள்ளலாம். ஓடிடி ஆப்கள் ஆப்ஷனில் கொடுக்கப்படுகின்றன. இதில் 2 ஆப்ஷன்கள் மட்டுமே கிடைக்கின்றன.

முதலில் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும். இரண்டாவது ஆப்ஷனில் சோனிலிவ் பிரீமியம் சந்தா கிடைக்கும். இந்த சலுகைகள் பிஎஸ்என்எல் ஃபைபர் திட்டங்கள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதேபோல ஐஎப்டிவி சில சர்க்கிள்களில் மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆகவே, திட்டத்தை பெறும் முன்பு அதை தெரிந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 625 Plan With 600 Live Channels 127 Premium Channels Check BSNL Silver Jubilee Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X