தினசரி 5ஜிபி டேட்டா: 90நாட்கள் வேலிடிட்டி.! பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பலே திட்டம் அறிமுகம்.!

|

ஜியோ,ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் நிறுவனம் தரமான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்யும் திட்டங்களுக்கு அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்ப்பு

உள்ளது.

இணையம் அதிகம் பயன்படுத்தும்

தற்சமயம் இந்த பிஎஸ்என்எல் நிறுவனம் தினசரி 5ஜிபி டேட்டா வழங்கும் ரூ.599 வொர்க் ஃபிரம் ஹோம் திட்டத்தை வெளயிட்டுள்ளது.

கண்டிப்பாக இணையம் அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர் மற்றும் வொர்க் ஃபிரம் ஹோம் செய்யும் மக்களுக்கு இந்த திட்டம்பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

பிஎஸ்என்எல் ரூ.599 வொர்க் ஃபிரம் ஹோம் திட்டத்தின் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.599 வொர்க் ஃபிரம் ஹோம் திட்டத்தின் நன்மைகள்

பிஎஸ்எனஎல் நிறுவனம் கொண்டுவந்த ரூ.599 வொர்க் ஃபிரம் ஹோம் திட்டம் ஆனது தினசரி 5ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ், அனைத்து நெட்வொர்க்கிற்கும் 250 நிமிடங்கள் அழைப்புகள் இலவசம் உள்ளிட்ட சில நன்மைகளை வழங்குகிறது.

600 நாட்கள் வேலிடிட்டி, 250 நிமிட குரல் அழைப்பு உள்ளிட்ட

இதற்குமுன்பு பிஎஸ்என்லஎல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 600 நாட்கள் வேலிடிட்டி, 250 நிமிட குரல் அழைப்பு உள்ளிட்ட

அம்சங்களோடு புதிய திட்டத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன்.!

600 நாட்கள் செல்லுபடியாகும் புதிய திட்டம்

600 நாட்கள் செல்லுபடியாகும் புதிய திட்டம்

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் இரண்டு பகுதிகளை தவிர இந்தியா முழுவதும் 600 நாட்கள் செல்லுபடியாகும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் விலை குறித்து பார்க்கலாம் அதுகுறித்து பார்ப்பதற்கு முன்பாக அரசு நடத்தும் தொலைத் தொடர்பு ஆபரேட்டரான பிஎஸ்என்எல் தமிழ்நாடுகளில் வழங்கி வந்த வசந்தம் 96 எனப்படும் ரூ.96 திட்டங்களை நீக்கியது. அதற்கு பதிலாக நிறுவனம் ரூ.74 மற்றும் ரூ.75 என்ற விலையில் திட்டங்களை அறிமுகப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்

முன்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த ரூ.149 மற்றும் ரூ.725 திட்டங்கள் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் பெற முடியாது என தெரிவித்தது.

ரூ.2399 மதிப்புள்ள புதியதொரு திட்டம்

ரூ.2399 மதிப்புள்ள புதியதொரு திட்டம்

இருப்பினும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது மற்றொரு டுவிட்டின் மூலம் ரூ.2399 மதிப்புள்ள புதியதொரு திட்டத்தை அறிமுகம்

செய்யப்போவதாக அறிவித்தது. இந்த திட்டமானது இந்தியா முழுவதும் கிடைத்தாலும் அந்தமான் நிக்கோபர் மற்றும் ஜம்மு- காஷ்மீர் வட்டங்களில் கிடைக்காது என தெரிவித்தது.

தினசரி 250 நிமிடங்கள்

தினசரி 250 நிமிடங்கள்

பிஎஸ்என்எல் வழங்கும் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் தினசரி 250 நிமிடங்களும் 100 எஸ்எம்எஸ்களும் வழங்க இருப்பதாக

தெரிவித்தது. அதேபோல் இந்த திட்டங்கள் மொத்தம் 600 நாட்கள் செல்லுபடியாகும் என தெரிவித்தது. அதுமட்டுமின்றி

தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன்களுக்கு அணுகல் முறையும் ரீசார்ஜ் செய்யப்பட்ட முதல் நாளில் இருந்து 60 நாட்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்தது.

தரவு நன்மைகள் எதுவும் இல்லை

தரவு நன்மைகள் எதுவும் இல்லை

இந்த திட்டத்தில் ஒருசிறு குறைபாடு உள்ளது. ரூ. 2399 திட்டத்தில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தரவு நன்மைகள்

எதுவும் வழங்கப்படவில்லை. இந்த திட்டம் நீண்ட நாட்கள் செல்லுபடியானாலும் வாடிக்கையாளர்களுக்கு குரல் அழைப்புகள் மட்டுமே வழங்கப்படுகிறது.

ரூ.74 மற்றும் ரூ.75

ரூ.74 மற்றும் ரூ.75

பிஎஸ்என்எல் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.96 பிரபல திட்டமாக அறிமுகமானது இருப்பினும் இந்த திட்டத்தின் வழங்கும் காலம் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வந்தாலும் இது தற்போது நிறுத்தப்படுகிறது. அதேபோல் ரூ.74 மற்றும் ரூ.75 என்ற விலையில் திட்டங்களை

அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BSNL Rs 599 Work From Home Prepaid Plan Offers 5GB Daily Data with 90 Days Validity: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X