உட்றா BSNL-க்கு வண்டிய.. மாதாந்திரம் ரூ.200 செலவில் 3GB டேட்டா, வாய்ஸ், SMS.. எந்த திட்டம்?
ரிலையன்ஸ் ஜியோவும், பார்தி ஏர்டெல்லும் தங்களுடைய ரூ.249 பேஸிக் ரீசார்ஜ்களை நீக்கிவிட்ட நிலையில், பட்ஜெட் வாசிகள் பலரும் வெறும் ரூ.141 முதல் 30 நாட்களுக்கான பேஸிக் ரீசார்ஜ்களை கொண்டிருக்கும் "பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பக்கம் சென்றால் என்ன?" என்று யோசிக்க தொடங்கி உள்ளனர்.
அந்த எண்ணத்தில் நீங்களும் இருந்தால் அல்லது நீங்கள் ஏற்கனவே ஒரு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் தான் என்றால் மாதாந்திரம் ரூ.200 என்கிற செலவில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த பிஎஸ்என்எல் திட்டதையும் நீங்கள் நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும். அது ரூ.599 திட்டமாகும்.

பிஎஸ்என்எல் ரூ.599 திட்டத்தின் வேலிடிட்டி என்ன? இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதாவது கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகும். ஆக மாதாந்திரம் ரூ.200 என்கிற செலவின் கீழ் 3 மாதங்களுக்கு உங்களுடைய சிம் காரட்டை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ளலாம். கூடவே டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.599 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? டெல்லி மற்றும் மும்பையின் எம்என்டிஎல் ரோமிங் பகுதி உட்பட அன்லிமிடெட் லோக்கல் வாய்ஸ் காலிங் மற்றும் நேஷனல் ரோமிங், டெய்லி 3ஜிபி அளவிலான டேட்டா, டெய்லி லிமிட் தீர்ந்ததும் 40kbps என்கிற இண்டர்நெட் ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும்.
ஒருவேளை உங்களுக்கு இன்னும் கொஞ்சம் மலிவான விலையில்.. இன்னும் கொஞ்சம் குறைவான டேட்டா நன்மையை வழங்கும் பிஎஸ்என்எல் திட்டம் தேவைப்பட்டால், நீங்கள் ரூ.498 பிளானை கருத்தில் கொள்ளலாம். இது 82 நாட்களுக்கு செல்லுபடியாகும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 1.5ஜிபி அளவிலான டேட்டா மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்கும்.
பிஎஸ்என்எல்-ன் பேஸிக் ரீசார்ஜ்களில் ஒன்றான ரூ.141 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இது 30 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இது டெய்லி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்கள் மற்றும் 200 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் தொடர்பான சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, இந்நிறுவனத்தின் 1 ஜிபிபிஎஸ் பிளான் ஆன ஃபைபர் ரூபி ஓடிடி (Fiber Ruby OTT) பிளான் மீது ரூ.6000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வழக்கமான செலவு ரூ.4,799 ஆகும். ஆனால் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை கிடைக்கும் சலுகை காலத்தின் கீழ், பயனர்கள் இந்த திட்டத்தை முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 தள்ளுபடியுடன் பெறலாம்.
அதாவது இந்த திட்டம் முதல் ஆறு மாதங்களுக்கு ரூ.4,799 க்கு பதிலாக ரூ.1000 தள்ளுபடியை பெற்று ரூ.3,799 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இப்படியாக உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 தள்ளுபடி என மொத்தம் 6 மாதங்களுக்கு ரூ.6000 தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடி நாட்டில் உள்ள எல்லா வட்டங்களிலும் கிடைக்காமல் போகலாம் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
சமீபத்தில் இந்நிறுவனம் தனது மலிவு விலையிலான டிரிபிள் ப்ளே திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.400 ஆகும். இந்த திட்டத்தின் கீழ் அதிவேக இண்டர்நெட், 400 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களுக்கான அணுகல் (ஈடிவி, எம்ஏஏ டிவி, ஜெமினி டிவி மற்றும் ஜீ டிவி உட்பட), ஒன்பது ஓடிடி ஆப்கள் மற்றும் நாடு தழுவிய அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும்
ஆனால் தற்போதைக்கு ரூ.400 மதிப்புள்ள பிஎஸ்என்எல்-ன் டிரிபிள் ப்ளே திட்டமானது ஆந்திர பிரதேச வட்டத்தில் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இது மற்ற வட்டங்களில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.


Click it and Unblock the Notifications








