Jio, Airtel, Vi-யை செஞ்சுவிட்ட BSNL.. இந்தியாவிலேயே இதான் கம்மி விலை.. 84 நாளுக்கு தினமும் 3GB.. எந்த திட்டம்?
அட்ராசக்கை, இப்படியொரு ரீசார்ஜ் திட்டத்தை தான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தோம் என்று மக்கள் வியப்புடன் குஷியடையும் வகையில், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது ஒரு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அதன் பட்டியலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Prepaid Plan) மலிவு விலையில் தினசரி 3GB டேட்டா நன்மையை வழங்க கூடிய திட்டமாக வெளிவந்துள்ளது. அதுவும் ஒரு மாதம் இரண்டு மாதம் இல்லை ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு தினமும் 3GB டேட்டாவை இந்த திட்டம் வழங்குகிறது. இத்திட்டத்தின் முழு விபரம் இதோ.
என்னது மலிவு விலையில் தினமும் 3GB டேட்டா நன்மையா? உண்மையாகவா? அதுவும் மூன்று மாத காலத்திற்கா? என்று மக்கள் வாய்பிளக்கும்படியான புதிய ரீசார்ஜ் திட்டத்தை அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இந்தியாவில் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் தினசரி 3GB டேட்டாவை மிகுந்த மலிவு விலையில் வழங்கும் திட்டமாக BSNL-ன் இந்த திட்டம் மட்டுமே உள்ளது.

Jio, Airtel, Vi-யை செஞ்சுவிட்ட BSNL.. இந்தியாவிலேயே இதான் கம்மி விலை ரீசார்ஜ் திட்டம்:
ஏற்கனவே, இந்தியாவில் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) அல்லது விஐ (Vi) போன்ற தனியார் டெலிகாம் (Telecom) நிறுவனங்களின் விலை ஏற்றத்திற்கு பிறகு, மக்கள் பிஎஸ்என்எல் (BSNL) பக்கம் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். மக்களின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க முடிவு செய்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல புதிய திட்டங்களை அதிக நன்மைகளுடன் வாரி வழங்கி வருகிறது.
அப்படி, இந்திய மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்த ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டம் தான்
பிஎஸ்என்எல் ரூ. 599 திட்டம் (BSNL Rs 599 Plan). இந்த திட்டம் அதன் பயனருக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இதில் உள்ளூர் அழைப்பு மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கான STD போன்ற அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக 84 நாட்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ. 599 திட்டம் (BSNL Rs 599 Plan):
இந்த பிஎஸ்என்எல் ரூ. 599 திட்டம் (BSNL Rs 599 Plan) தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் ஸ்டார் அம்சம்சமே இதில் வழங்கப்படும் டேட்டா நன்மை தான் என்றே கூட நாம் கூறலாம். இந்த திட்டம் தினசரி 3GB டேட்டா நன்மையை வழங்கும் திட்டமாக வெளிவந்துள்ளது. இந்த டேட்டாவை இப்போது BSNL பயனர்கள் 4ஜி வேகத்தில் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு.
84 நாளுக்கு தினமும் 3GB டேட்டா நன்மை.. இந்தியாவிலேயே இதான் கம்மி விலை திட்டம்:
ஆம், பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் உள்ள பல இடங்களில் இப்போது அதன் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்க துவங்கியுள்ளது. உங்கள் ஏரியாவில் பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் (BSNL 4G Network) இப்போது கிடைக்கிறது என்றால், நீங்கள் இந்த திட்டத்தின் தினசரி 3GB டேட்டா நன்மையை 4ஜி ஸ்பீட் வேகத்துடன் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் செல்ஃப் கேர் மொபைல் ஆப்ஸ் (BSNL Self Care App):
இந்த திட்டம் இப்போது பிஎஸ்என்எல் செல்ஃப் கேர் மொபைல் ஆப்ஸ் (BSNL Self Care Apps) வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோர் (Apple App Store) ஆகிய இரண்டு தளங்களிலும் இந்த பிஎஸ்என்எல் செல்ஃப் கேர் ஆப்ஸ் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. இதை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் மொபைல் நம்பர் விபரங்களை வழங்கி OTP உள்ளிட்டு லாகின் செய்துகொள்ளவும். இப்போது காண்பிக்கப்படும் விருப்பங்களில் இருந்து Recharge என்பதை கிளிக் செய்து, Browse pack என்பதை கிளிக் செய்யவும். இப்போது காண்பிக்கப்படும் பட்டியலில் இருந்து BSNL 599 Plan என்பதை தேர்வு செய்து, இந்த திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications