BSNL போட்ட ஒரே போடு.. 70 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ரூ.599-க்கு முடிந்தது!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு கிடைக்காத விலையில் பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கொண்ட திட்டம் கிடைக்கிறது. இந்த டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்களும் (Unlimited Voice Calls) கொடுக்கப்படுகிறது. இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ.599 திட்ட விவரங்கள் (BSNL Rs 599 Plan Details): இந்த திட்டத்துக்கு 2 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி கிடைக்கிறது. அதாவது, 70 நாட்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். இந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கும்.

70 நாட்களுக்கு மொத்தமாக 210 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த திட்டம் 3ஜி மட்டுமல்லாமல், 4ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கும் கிடைக்கிறது. ஆகவே, பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்கள் மலிவான விலைக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடிகிறது.
இந்த விலைக்கு ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவில் 3 ஜிபி டேட்டா திட்டம் கிடைக்காது. இந்த டேட்டா சலுகை போக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. அதே நேரத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் செய்து கொள்ளலாம்.
இந்த சலுகைகளையே ரூ.599 விலை கொண்ட பிஎஸ்என்எல் திட்டம் கொடுக்கிறது. இதைவிட மலிவான விலைக்கும் அதே நேரத்தில் அதிக வேலிடிட்டி கொடுக்கும்படியும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. ஆனால், அதில் டேட்டா சலுகை மட்டும், 3 ஜிபிக்கு பதிலாக 2 ஜிபியாக கிடைக்கும். இருப்பினும், விலையை பார்க்கையில் கம்மியான பணத்தில் பெற்று கொள்ள முடிகிறது.
பிஎஸ்என்எல் ரூ.485 திட்ட விவரங்கள் (BSNL Rs 485 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு முந்தைய திட்டத்தைவிட 2 நாட்கள் கூடுதலாக வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 72 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது.
72 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால் மொத்தமாக 144 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டமும் 3ஜி மற்றும் 4ஜி வேகத்தில் பெற்று கொள்ளலாம். உங்களது பகுதியில் 4ஜி கிடைத்தால், அந்த வேகத்திலேயே டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். மற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் ஒரே மாதிரியாகவே கிடைக்கின்றன.
ஆகவே, 72 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இந்த 2 திட்டங்களும் வேண்டாம், வாய்ஸ் கால்கள் மட்டுமே கொடுக்கும் திட்டம் இதே பட்ஜெட்டில் இருக்கிறதா என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு ஒரு பக்கா திட்டம் இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.439 திட்ட விவரங்கள் (BSNL Rs 439 Plan Details): இந்த திட்டத்துக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இது முந்தைய திட்டங்களைவிட அதிக வேலிடிட்டி கொடுக்கிறது. அதே நேரத்தில் இதில் டேட்டா சலுகை கிடைக்காது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் செய்ய கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








