Home
News

BSNL SIM-க்கு யோகம்.. 70 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 100 எஸ்எம்எஸ்!

தினசரிக்கு 3 ஜிபி டேட்டாவுடன் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளும் வேண்டும், வேலிடிட்டியும் கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும் என்று கேட்கும் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் இந்த திட்டம் பக்காவாக இருக்கும். மற்ற நிறுவனங்களைவிட விலையும் கம்மியாகவே இருக்கும். இந்த 3 ஜிபி தினசரி டேட்டா திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ.599 திட்ட விவரங்கள் (BSNL Rs,599 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 70 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 2 மாதங்களுக்கு மேல் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. ஆகவே, 210 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும்.

BSNL SIM-க்கு யோகம்.. 70 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா..

தினசரி டேட்டா 3 ஜிபி முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா தொடர்ந்து கொடுக்கப்படும். இந்த சலுகைகள் போக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. பிஎஸ்என்எல் ஆன்லைன் போர்டல், பிஎஸ்என்எல் செல்ப் கேர் ஆப் ஆகியவற்றில் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதிக வேலிடிட்டிக்கு மற்றொரு திட்டம் இருக்கிறது.

இதில் தினசரி டேட்டா குறைவாக இருக்கும். ஆனால், முந்தைய திட்டத்தைவிட டபுள் வேலிடிட்டி கிடைப்பதால், மொத்த டேட்டா சலுகை அதிமாக கிடைக்கும். மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதாவது, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். விலையிலும் பெரிய மாற்றம் இருக்காது. முந்தைய திட்டத்தைவிட கிட்டத்தட்ட ரூ.400 கூடுதலாக இருக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.997 திட்ட விவரங்கள் (BSNL Rs.997 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 150 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இது முந்தைய திட்டத்தைவிட டபுள் மடங்காக இருக்கிறது. இந்த நாட்களில் தினசரிக்கு 2 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. இது முந்தைய திட்டத்தைவிட 1 ஜிபி கம்மியாக இருக்கிறது. ஆனால், 150 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 300 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம்.

இது முந்தைய திட்டத்தைவிட 190 ஜிபி டேட்டா அதிகமாக இருக்கிறது. மேலும், 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆகவே, 2 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளது.

டேட்டா கம்மியாகவும் வேலிடிட்டி அதிகமாகவும் வேண்டுமானால், மூன்றாவதாக ஒரு திட்டம் இருக்கிறது. இது ரூ.1499 விலைக்கு கிடைக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப வேலிடிட்டி அதிகமாக கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 300 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது முந்தைய திட்டத்தைவிட பாதிக்குப்பாதி அதிகமாக இருக்கிறது. இந்த நாட்களில் 32 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும்.

இந்த டேட்டாவை 300 நாட்கள் முழுவதும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை கொடுத்து உள்ளது. இதில் வேலிடிட்டி மற்றும் டேட்டாவின் தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X