Home
News

BSNL-க்கு 4G வரப்போகுது.. இதை முதல்ல பண்ணுங்க.. ரூ.599-க்கு முடிஞ்சிரும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 3 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் 4ஜி சேவைகளை (4G Services) தொடங்காத முன்பே நாளுக்கு நாள் கஸ்டமர்களை தட்டித் தூக்கி வருகிறது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) போன்ற முன்னணி நிறுவனங்களின் கட்டண உயர்வு காரணமாகவே பிஎஸ்என்எல் நிறுவனம் அடிமட்ட விலையிலான திட்டங்கள் மூலம் பட்டையை கிளப்புகிறது. அடுத்த சில மாதங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்க இருப்பதால், இப்போதே எந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று திட்டம்போட கஸ்டமர்கள் ரெடியாகிவிட்டனர். இந்த திட்டமே அதற்கு ஆப்ஷன்.

பிஎஸ்என்எல் ரூ 599 திட்ட விவரங்கள் (BSNL Rs 599 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது (Prepaid Plan) ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்களுக்கு அதிகப்படியான டேட்டாவை கொடுக்கும் திட்டமாக இருக்கிறது. ஏனென்றால், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. இந்த 3 ஜிபிக்கு பிறகும் அன்லிமிடெட் டேட்டா கொடுக்கப்படுகிறது. ஆனால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே கிடைக்கும்.

BSNL-க்கு 4G வரப்போகுது.. இதை முதல்ல பண்ணுங்க.. ரூ.599-க்கு முடிந்தது!

இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 252 ஜிபி டேட்டாவை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த அடிமட்ட விலைக்கு இவ்வளவு வேலிடிட்டி மற்றும் டேட்டா சலுகைகளை மற்ற நிறுவனங்களில் எதிர்பார்க்க முடியாது. மேலும், இந்த திட்டத்தின் டேட்டா போக 24 ஜிபி டேட்டா கூடுலாக கொடுக்கப்படுகிறது. இதை முதல் 24 நாட்களில் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இல்லையென்றால், 24 ஜிபி டேட்டா காலாவதியாகிவிடும். இதுபோக மற்ற சலுகைகளிலும் இந்த திட்டம் மூக்கில் விரல் வைக்க செய்கிறது. அதாவது, அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) கொடுக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ள முடியும்.

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வீதம் 84 நாட்களுக்கு செய்து கொள்ளலாம். இந்த முக்கிய சலுகைகளுக்கு பிறகு கூடுதலாக பல்வேறு சலுகைகளை இந்த திட்டம் பேக் செய்துள்ளது. அதாவது, ஜிங்க் மியூசிக் (Zing Music), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes) மற்றும் கேம் ஆன் (GameON) சலுகை கிடைக்கிறது. மேலும், அஸ்ட்ரோடெல் (Astrotell) மற்றும் ஹார்டி கேம்ஸ் (Hardy Games) சலுகையும் வருகிறது.

இதுபோக ஹார்டி கேம்ஸ் (Hardy Games), சேலஞ்சர் அரினா கேம்ஸ் (Challenger Arina Games), கேமியம் (Gamium) மற்றும் லைஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podcast) சலுகை கிடைக்கிறது. இறுதியாக ஓடிடி பிரியர்களையும் கவர் செய்யும்படி வாவ் எண்டர்டெயின்மெண்ட் (Wow Entertainment) சந்தா கொடுக்கப்படுகிறது. இவ்வளவு சலுகைகளையும் வெறும் ரூ 599 விலையில் பேக் செய்து கொடுத்துள்ளது.

ஆகவே, இந்த பிஎஸ்என்எல் திட்டம் எப்படி பார்த்தாலும், லாபம் கொடுக்கக்கூடிய திட்டமாகவே இருக்கிறது. இதைவிட கம்மியான விலைக்கு இதேபோல பல்வேறு சலுகைகள் கொடுக்கும் திட்டம் வேண்டுமானால், ரூ 485 விலையில் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 485 திட்ட விவரங்கள் (BSNL Rs 485 Plan Details): இந்த திட்டத்துக்கு 80 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. 2 ஜிபி டேட்டா வீதம் 160 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த 2 ஜிபிக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேக டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் செய்து கொள்ளலாம். இதுவும் லாபகரமான ப்ரீபெய்ட் திட்டமாகும். இதுபோல பல்வேறு திட்டங்களை பிஎஸ்என்எல் கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 599 Plan With 3GB Daily Data 84 Days Validity Unlimited Voice Calls Check Best Data Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X