Home
News

அதான் பிஎஸ்என்எல்.. மாதம் ரூ.199 போதும்.. 3 மாதம் அன்லிமிடெட் கால்கள்.. 3 ஜிபி டெய்லி டேட்டா!

டெலிகாம் கஸ்டமர்கள் அறக்க பறக்கும் விதமாக மாதத்துக்கு வெறும் ரூ.199 செலவில் 84 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், கேமிங் சர்வீஸ் போன்ற பல்வேறு சலுகைகளை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ 599 திட்ட விவரங்கள் (BSNL Rs 599 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Prepaid Plan) டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல் கூடுதலாக பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆகவே, மொத்தமாக 252 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.

மாதம் ரூ.199 போதும்.. 3 மாதம் அன்லிமிடெட் கால்கள்.. 3 ஜிபி டேட்டா!

இந்த தினசரி டேட்டா 3 ஜிபிக்கு பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த திட்டத்தில் டேட்டாவை பற்றிய கவலையே கஸ்டமர்களுக்கு வேண்டியது கிடையாது. அதே போல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகைகள் இந்த திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக ஜிங்க் (Zing) ஆப் சந்தா கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், பிஆர்பிடி (PRBT), அஸ்ட்ரோசெல் (Astrocell) மற்றும் கேம்ஆன் சர்வீஸ் (GameOn Services) சலுகைகளும் இந்த திட்டத்தில் கொடுக்கப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதற்கான மாதாந்திர செலவை பார்த்தால், வெறும் ரூ.199 மட்டுமே தேவைப்படுகிறது. ஆகவே, தினசரி 3 ஜிபி போன்ற அதிகப்படியான டேட்டா சலுகை கொண்ட திட்டத்தில் இது லாபம் தரக்கூடியதாகவே இருக்கிறது. இதேபோன்ற சலுகைகளுடன் லோக்துன் சலுகை வேண்டுமானால், பின்வரும் திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.

பிஎஸ்என்எல் ரூ 769 திட்ட விவரங்கள் (BSNL Rs 769 Plan Details): இந்த திட்டத்திலும் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், 84 நாட்கள் வேலிட்டிட் மட்டுமல்லாமல், லோக்துன், பிஎஸ்என்எள் டியூன்ஸ் போன்ற கூடுதல் சலுகைகள் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. மொத்தமாக 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.

மாதம் ரூ.199 போதும்.. 3 மாதம் அன்லிமிடெட் கால்கள்.. 3 ஜிபி டேட்டா!

முந்தைய திட்டத்தை போலவே தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அதே போல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இந்த சலுகைள் போக பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), ஹர்டி மொபைல் கேம்ஸ் சர்வீஸ் (Hardy Mobile Games Service) சலுகை கொடுக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், சேலன்ஜ் அரினா மொபைல் கேமிங் (Challenges Arena Mobile Gaming), லைஸ்டின் மியூசிக் சர்வீஸ் (Lystn Music Service),லோக்துன் (Lokdhun) மற்றும் ஜிங்க் (Zing) ஆகிய சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவை பார்த்தால், ரூ.256 தேவைப்படுகிறது. மூன்று மாதங்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் நல்ல சலுகைகள் வேண்டுமானால், இந்த திட்டங்களை தேர்ந்தெடுங்கள்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 599 Plan Offers Unlimited Voice Calls, 3GB Data, 84 Days Service Validity 40Kbps FUP Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X