Home
News

BSNL டோட்டல் சேஞ்ச்.. பழைய கட்டணம் கிடையாது.. எல்லாமே கூடுதலாக வருது.. இப்பவோ ரீசார்ஜ் பிச்சிக்குது!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்கள் மலிவான விலையில் கொடுக்கும் திட்டங்களின் விலையை அதிகரிக்க திட்டமிட்டிருக்கும் நேரத்தில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், பழைய திட்டத்தின் சலுகைகளை விலையை ஏற்றாமலேயே அதிரடியாக உயர்த்தி இருக்கிறது.

வெறும் ரூ 599 விலையில் கிடைக்கும் ஃபைபர் திட்டத்தில் (Fiber Plan) பொசுக்கென்று சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது. ஒரே விலையில் அதிகப்படியான டேட்டா கொண்ட திட்டமும், ஓடிடி சலுகையுடன் மற்றொரு திட்டமும் இப்போது கிடைக்கிறது. முதலில் சலுகை உயர்த்தப்பட்ட திட்டத்தின் விவரங்களை பார்ப்போம்.

BSNL டோட்டல் சேஞ்ச்.. பழைய கட்டணம் கிடையாது.. எல்லாமே கூடுதலாக வருது!

முன்னதாக, இந்த திட்டத்தில் 60 எம்பிபிஎஸ் வேக டேட்டா சலுகை கொடுக்கப்பட்டது. அதிகபட்சமாக 3.3 டிபி டேட்டா கிடைத்தது. அதேபோல 2 எம்பிபிஎஸ் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா மற்றும் லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால் சலுகை வழங்கப்பட்டது. இப்போது, 40 எம்பிபிபிஸ் வேகம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல மொத்த டேட்டா சலுகையும் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த திட்டத்தின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், பிஎஸ்என்எஸ் ஃபைபர் வாடிக்கையாளர்கள் (BSNL Fiber Customer) குஷியாக இருக்கின்றனர். இப்போது, இந்த திட்டத்தின் புதிய சலுகைகளை தெரிந்து கொள்வோம்.

பிஎஸ்என்எல் ரூ 599 திட்ட விவரங்கள் (BSNL Rs 599 Plan Details): இதுவொரு ஃபைபர் பேசிக் பிளஸ் (Fibre Basic Plus) திட்டமாகும். இந்த திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம். 24 மணி நேரமும் அன்லிமிடெட் டேட்டா சேவை வழங்கப்படுகிறது.

BSNL டோட்டல் சேஞ்ச்.. பழைய கட்டணம் கிடையாது.. எல்லாமே கூடுதலாக வருது!

அதிகபட்சமாக 4000 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும். இந்த 4டிபி டேட்டாவுக்கு பிறகும் ஃபேர் யூசேஜ் பாலிசி சலுகையில் கீழ் 4 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவை வேலிடிட்டி முடியும் வரையில் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த சலுகைகள் போக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD Voice Call) வாய்ஸ் கால் சலுகை கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஓடிடி சலுகை வேண்டுமானால், மற்றொரு திட்டம் இருக்கிறது. இந்த ஓடிடி ஃபைபர் திட்டத்தின் சலுகைகை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ஃபைபர் பேசிக் ஓடிடி ரூ 599 திட்ட விவரங்கள் (BSNL Fibre Basic OTT Rs 599 Plan Details): இந்த ஃபைபர் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல் ஓடிடி சலுகையும் கிடைக்கிறது. இதனால், டேட்டா சேவையில் கிடைக்கும் சலுகைகள் சற்று குறைக்கப்பட்டுள்ளன.

ஆகவே, இந்த ஃபைபர் பேசிக் ஓடிடி திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்களுக்கு 75 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவை வழங்கப்படுகிறது. இருப்பினும், முந்தைய திட்டத்தை போலவே மொத்தமாக 4000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல 4 எம்பிபிஎஸ் வேகத்தில் ஃபேர் யூசேஜ் டேட்டா சலுகை வருகிறது.

மேலும், அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் போக டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சூப்பர் (Disney+ Hotstar Super) சந்தா வழங்கப்படுகிறது. இந்த ஓடிடிக்கு கூடுலாக எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. ஆகவே, கம்மியான ஃபைபர் பிளஸ் ஓடிடி திட்டத்துக்கு இந்த ஆப்ஷனில் எடுக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 599 Plan Offers 100Mbps Speed Data, Unlimited Voice Calls Check Fibre Basic Plus Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X