Home
News

இறங்கி அடித்த BSNL.. மாதத்துக்கு ரூ.199 போதும்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. 3GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள்கூட வழங்காத சலுகைகளை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ரூ 599 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 599 Plan) வழங்குகிறது. இந்த திட்டத்தின் முழு சலுகைகள் மற்றும் வேலிடிட்டி விவரங்கள் இதோ.

பிஎஸ்என்எல் ரூ 599 பிளான் விவரங்கள் (BSNL Rs 599 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) மற்ற எந்தவொரு டெலிகாம் நிறுவனங்களும் வழங்காத சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் ப்ரீ நைட் டேட்டா (Unlimited Free Night Data) சலுகையும் கொடுக்கப்படுகிறது.

மாதத்துக்கு ரூ.199 போதும்.. 84 நாட்களுக்கு டேட்டா.. வாய்ஸ் கால்கள்!

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, மொத்தமாக 252 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடிகிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் போக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.

மேலும், ஜிங்க் (Zing) பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. அதோடு நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் அன்லிமிடெட் ப்ரீ நைட் டேட்டா சலுகையை பெற்று கொள்ள முடிகிறது. அதுமட்டுமல்லாமல், ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 40 கேபிபிஎஸ் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது.

தினசரி டேட்டா 2 ஜிபிக்கு பிறகு இதை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு எந்தவொரு ரீசார்ஜ் அவசியும் ஏற்படாது. குறிப்பாக, இந்த திட்டத்தின் மாதாந்திர செலவை பார்த்தால், வெறும் ரூ.199 மட்டுமே தேவைப்படுகிறது.

மாதத்துக்கு ரூ.199 போதும்.. 84 நாட்களுக்கு டேட்டா.. வாய்ஸ் கால்கள்!

இதே சலுகைகள் கொண்ட திட்டம் ரூ 500க்கும் கீழ் வேண்டுமானால், நீங்கள் பிஎஸ்என்எல் ரூ 485 திட்டத்தை (BSNL Rs 485 Plan) ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்திலும் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற அனைத்து சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் விவரங்களை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ 485 பிளான் விவரங்கள் (BSNL Rs 485 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 82 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதுவும் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கான சலுகைகளையே கொடுக்கிறது. இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி வீதம் மொத்தமாக 123 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

அதோடு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம். அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் வழங்கப்படுகிறது. முந்தைய திட்டத்தைப் போலவே தினசரி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திவிட்டாலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பெற்று கொள்ள முடியும்.

இருப்பினும், அன்லிமிடெட் நைட் டேட்டா சலுகையானது, இந்த திட்டத்தில் கிடைக்கவில்லை. இந்த பிஎஸ்என்எல் ரூ 485 திட்டத்துக்கான மாதாந்திர செலவை பார்த்தால் வெறும் ரூ 162 மட்டுமே தேவைப்படுகிறது. ஆகவே, எப்படி பார்த்தாலும் இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்களும் நல்ல சலுகைகளையே வழங்குகின்றன என்பதில் சந்தேகமில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 599 Plan Comes With 84 Days Validity, 3GB Daily Data, 40 Kbps FUP Data Check 3 Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X