Home
News

BSNL சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? கம்மி பட்ஜெட்ல தினமும் 3GB டேட்டா.. 70 நாட்கள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?

ஜியோ (Jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் தினமும் 3ஜிபி டேட்டா உடன் அதிக நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

BSNL சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? கம்மி பட்ஜெட்ல தினமும் 3GB டேட்டா..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

குறிப்பாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் இதுபோன்ற திட்டங்களில் அதிக டேட்டா மற்றும் வேலிடிட்டி வழங்குவதில்லை. எனவே தினசரி 3ஜிபி டேட்டா, அதிக நாட்கள் வேலிடிட்டி மற்றும் வாய்ஸ் கால்கள் எதிர்பார்க்கும் பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

ஒருவேளை தினசரி 3ஜிபி டேட்டா உடன் 365 நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. இப்போது பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2799 Prepaid Plan) ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் தினசரி 3ஜிபி இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆகவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? கம்மி பட்ஜெட்ல தினமும் 3GB டேட்டா..

அதுவும் பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதுவும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. கூடிய விரைவில் இந்நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 599 Plan 70 Days Validity, Daily 100 Sms, Unlimited Calls and 210GB Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X