Home
News

மிரள வைக்கும் BSNL.. கம்மி பட்ஜெட்ல 70 நாள் வேலிடிட்டி.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. யாரு விடுவா?

தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. அதேபோல் கூடிய விரைவில் இந்நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இங்கே அந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மிரள வைக்கும் BSNL.. கம்மி பட்ஜெட்ல 70 நாள் வேலிடிட்டி..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்(BSNL Rs 599 Prepaid plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் சலுகைகள் எதுவும் கிடைக்காது.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 299 Prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்கும். 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். ஒருவேளை அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா எதிர்பார்க்கும் பயனர்கள் பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

மிரள வைக்கும் BSNL.. கம்மி பட்ஜெட்ல 70 நாள் வேலிடிட்டி..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது.குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது.பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 599 and Rs 299 prepaid plans offer 3GB data per day: check validity and other benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X