தலைவன் வேற ரகம்.. BSNL ரூ.59 திட்டம்.. தினசரி 1GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இந்தியாவில் புதிதாக 59 ரூபாயில் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (BSNL Rs 59 Prepaid Plan) அறிமுகம் செய்துள்ளது. அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு (Telecom) நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) தற்போது BSNL 59 Plan என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் தினசரி 1GB டேட்டா நன்மை மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை போன்றவற்றை BSNL வழங்குகிறது. இதன் வேலிடிட்டி மற்றும் முழு நன்மை குறித்த விபரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த ஜூலை மாதம், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்கள் திடீர் விலை ஏற்றத்தை அறிவித்து, புதிய விலை திருத்தங்களை அறிமுகம் செய்தன. இதனால், குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ரீசார்ஜ் திட்டங்கள் எல்லாம் 21% மேல் விலை அதிகமாகின. இதனால், மக்கள் பெரும் சிக்கலை சந்திக்க நேரிட்டது.

தலைவன் வேற ரகம்.. BSNL ரூ.59 திட்டம்.. தினசரி 1GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்:
இருப்பினும், இந்தியாவில் இப்போது வரை எந்தவொரு ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையையும் அதிகரிக்காத ஒரே டெலிகாம் நிறுவனமாக பிஎஸ்என்எல் மட்டுமே திகழ்கிறது. மலிவு விலையில் அதிக நன்மையை வாரி வழங்கும் ஒரு டெலிகாம் நிறுவனமாக பிஎஸ்என்எல் தற்போது உருமாறியுள்ளது. இதுவரை பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை பெரியளவில் மதிக்க மக்கள் கூட, இப்போது போட்டிபோட்டுக்கொண்டு புதிய பிஎஸ்என்எல் சிம் கார்ட் (BSNL SIM Card) வாங்கும் நிலைமை உருவாகியுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது மிகமிக குறைந்த விலையில் எல்லா மக்களும் பயன்பெறும் வகையில், புதிதாக பிஎஸ்என்எல் ரூ. 59 திட்டம் என்ற புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பிஎஸ்என்எல் பிளான் 59 (BSNL Plan 59) விலை அளவில் மலிவானதாக தோன்றினாலும், இதன் கீழ் கிடைக்கும் நன்மைகள் சற்று டீசெண்டாகவே இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ. 59 திட்டம் (BSNL Rs 59 Plan):
BSNL 59 Plan என்ற இந்த புதிய திட்டம் தினசரி 1GB டேட்டா நன்மையை (BSNL 1GB data per day) வழங்குகிறது. இந்த திட்டம் பிஎஸ்என்எல் நெட்வொர்க் உட்பட, ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற அணைத்து டெலிகாம் நெட்வொர்க் அழைப்புகளையும் இலவசமாகவும், அன்லிமிடெட் (Unlimited voice call benefits) ஆகவும் வழங்கி அசத்துகிறது.
இந்த திட்டம் மிகவும் மலிவு விலை விருப்பமாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இதனால் தானோ என்னவோ, பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ் எந்தவித இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த பிஎஸ்என்எல் ரூ. 59 திட்டம் (BSNL Rs 59 Plan) 7 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறுகிய காலத்திற்கு, அதிக செலவில்லாமல், தினசரி டேட்டா நன்மை மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் மிக சிறந்த தேர்வாக அமைகிறது.


Click it and Unblock the Notifications








