BSNL ரூ.5399 திட்டம் அறிமுகம்.. என்னென்ன நன்மைகள்? எத்தனை நாட்கள் வேலிடிட்டி?
தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். கடந்த ஆண்டு இறுதியில் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தின. அதேபோல் இந்த ஆண்டு இறுதிக்குள் ப்ரீபெய்ட கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளன தனியார் டெலிகாம் நிறுவனங்கள்.
ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தவில்லை. அதாவது இப்போதும் கம்மி பட்ஜெட்டில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். இந்நிலையில் பிஎஸ்என்எல் கோல்ட் இன்டர்நேஷனல் பிளான் எனும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது பிஎஸ்என்எல் பயனர்களுக்கு வெளிநாடு செல்லும் போது கோல்ட் இன்டர்நேஷனல் பிளான் பயனுள்ள வகையில் இருக்கும். அதுவும் 18 நாடுகளில் இந்த திட்டத்தின் மூலம் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் விலை ரூ.5399 ஆகும். குறிப்பாக இந்த சர்வதேச ரோமிங் பேக் உலகெங்கிலும் உள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.5399 கோல்ட் திட்டம் ( BSNL Rs.5399 Gold plan) ஆனது 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 30 நிமிட அழைப்பு நன்மைகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் மொத்தமாக 3ஜிபி டேட்டா பெறமுடியும். மேலும் 15 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக ஒவ்வொரு நாடுகளிலும் புதிய சிம் கார்டுகளை வாங்கும் சிரமம் இல்லாமல் அழைப்பு நன்மைகள் மற்றும் டேட்டா சேவைகள் தேவைப்படும் பயணிகளுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதுவும் பூட்டான், கிரீஸ், மலேசியா, ஆஸ்திரியா, சீனா, வியட்நாம், நேபாளம், இலங்கை, ஜெர்மனி, இஸ்ரேல், வங்காள தேசம், மியான்மர், குவைத், தாய்லாந்து, டென்மார்க், உஸ்பெகிஸ்தான் (Uzbekista), பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் பிஎஸ்என்எல் பயனர்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த நாடுகளில் உள்ள உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் BSNL கூட்டு சேர்ந்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டுவந்துள்ள ரூ.5399 திட்டம் வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமீபத்தில் வெளியான தகவலின்படி, இந்தியா முழுவதும் 84 ஆயிரம் புதிய 4ஜி மொபைல் டவர்களை நிறுவியுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.
4ஜி சேவை
அதுவும் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் உதவியுடன் 1 லட்சம் 4ஜி டவர்களை நிறுவும் நிறுவனத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த டவர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் கிராமப்புற, நகரப்புற என மொத்தம் 9 கோடிக்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் பயனர்கள் பயன் பெறுவார்கள். இந்த இலக்குடன் டவர்கள் நிறுவப்பட்டு உள்ளன. பின்பு இந்த பணிகள் நிறைவடைந்ததும், 4ஜி டவர்கள் விரைவில் 5ஜி சேவைகளை வழங்கும் வகையில் அவற்றின் தரம் மேம்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இதுவரை 83.99 சதவீத திட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன்படி 84 ஆயிரம் டவர்கள் நிறுவப்பட்டு உள்ளன. அதுவும் இந்த 4ஜி டவர்களை முழுமையாக நிறுவும் பணிகள் முடிவடைந்ததும், விரைவில், 5ஜி சேவைகளைத் தொடங்க பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதுவும் இது ஜூன் மாதத்தில் இருந்து சாத்தியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








