டெய்லி ரூ.180 செலவில் BSNL-ன் இன்டர்னேஷனல் ரோமிங் பிளான்.. 30GB டேட்டா, வாய்ஸ் கால், SMS.. என்ன விலை?
பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டிடம் ஒரு பலருக்கும் தெரியாத ஒரு நீண்ட கால ப்ரீபெய்ட் இன்டர்நேஷனல் ரோமிங் பேக் உள்ளது. இது உலகம் முழுவதும் 18 நாடுகளில் கனெக்ட்விட்டியை வழங்குகிறது. என்ன விலை? என்னென்ன நாடுகள்? என்னென்ன நன்மைகள்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
பிஎஸ்என்எல்-ன் இந்த ப்ரீபெய்ட் இன்டர்நேஷனல் ரோமிங் பேக்கின் விலை ரூ.5,399 ஆகும். பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தை "கோல்ட் இன்டர்நேஷனல் ரோமிங் திட்டம்" என்று அழைக்கிறது. இது ஒரு நாளைக்கு ரூ.180 என்கிற பயனுள்ள செலவின் கீழ் சர்வதேச அழைப்புடன், டேட்டா பேக் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது.

அதாவது இந்த திட்டம் 30 நாள் செல்லுபடியாகும் என்று அர்த்தம். இது நீண்ட கால சர்வதேச ரோமிங் திட்டங்களை தேடுபவர்களுக்கு மிகவும் ஏற்ற திடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாப் பயணிகள், வணிகப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு!
30 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்தின் கீழ் இது 3 ஜிபி அதிவேக டேட்டா, 30 நிமிட அவுட்கோயிங் வாய்ஸ் கால்கள் மற்றும் 15 எஸ்எம்எஸ் மெசேஜ்களை வழங்குகிறது. பிஎஸ்என்எல்-ன் கூற்றுப்படி இது பூட்டான், ஜெர்மனி, மலேசியா, டென்மார்க், இஸ்ரேல், கிரீஸ், பிரான்ஸ், ஜப்பான், குவைத், மியான்மர், நேபாளம், வியட்நாம், பங்களாதேஷ், சீனா, தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், ஆஸ்திரியா மற்றும் இலங்கை என உலகளவில் 18 நாடுகளில் இந்த திட்டம் கிடைக்கும்.
பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், ஆப் அல்லது உள்ளூர் சில்லறை விற்பனையாளர் மூலம் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். இருப்பினும், ரீசார்ஜ் செய்வதற்கு முன், வாடிக்கையாளர்கள் தங்கள் பிஎஸ்என்எல் சிம் காரட்டில் சர்வதேச ரோமிங் இயக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
உங்களுடைய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் சிம் காரட்டில் சர்வதேச ரோமிங்கை செயல்படுத்துவது எப்படி? எவ்வாறு சர்வதேச ரோமிங்கை செயல்படுத்த, பயனர்கள் எவ்வாறு வாடிக்கையாளர் சேவை மையத்தை 1503 என்கிற எண்ணின் வழியாக அல்லது மைபிஎஸ்என்எல் (MyBSNL) ஆப் மூலம் அழைத்து, அந்த எண்ணில் இன்டர்நேஷனல் ரோமிங்கை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்க வேண்டும்.
நீங்கள் எங்க நாட்டிற்கு பயணிக்கிறீர்களோ அந்த நாட்டிற்கு வந்ததும், நெட்வொர்க் இன்னும் தானாக இணைக்கப்படவில்லை என்றால், பயனர்கள் பிஎஸ்என்எல் மொபைல் டேப்பின் கீழ் ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ்-ல் உள்ள நெட்வொர்க் விருப்பங்களின் கீழ் "இண்டர்நேஷனல்" என்பதை இயக்க வேண்டும்
பிஎஸ்என்எல் தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, இந்நிறுவனம் அறிவித்துள்ள பிஎஸ்என்எல் ஃபிளாஷ் சேல் ஆனது ஜூலா 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அறியாதோர்களுக்கு இதன் கீழ் ஒரு ஸ்பெஷல் திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன் விலை ரூ.400 ஆகும். இது 40 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் கீழ் 400ஜிபி அளவிலான ஹை-ஸ்பீட் 4ஜி டேட்டா கிடைக்கும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ஸ்பெஷல் திட்டம் ஆனது ஜூலை 27 ஆம் தேதி வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக ரூ.400 க்கு 400ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் முந்திக்கொள்ளவும். இது ஒரு டேட்டா ரீசார்ஜ் என்பதால், பயனர்கள் ஏற்கனவே உள்ள திட்டத்துடன் இணைந்து தான் இதைரீசார்ஜ் செய்ய முடியும்.
மேலும் ரூ.400 திட்டத்தின் கீழ் வெறும் டேட்டா நன்மை மட்டுமே கிடைக்கும். அதாவது இது வாய்ஸ் காலிங் அல்லது எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்காது என்று அர்த்தம். இருப்பினும் ரூ.400 திட்டத்தின் கீழ் கிடைக்கும் 400ஜிபி டேட்டாவை 40 நாட்களுக்கு முன்பே நீங்கள் பயன்படுத்தி விட்டீர்கள் என்றால்.. 400ஜிபிக்கு பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40கேபிபிஸ் ஆககுறைக்கப்படும். அதாவது இது அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும் திட்டமாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications








