Home
News

BSNL-க்கு கோடி கும்பிடு.. ரூ.51 போதும்.. 28 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு கோடி கும்பிடு போடலாம் போல என்று சொல்லும்படி ரூ.51 விலைக்கு 28 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ஜூன் 30ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இந்த விலைக்கு கிடைக்கும்.

புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே ரூ.51 விலைக்கு ரீசார்ஜ் கொடுக்கப்படுகிறது. அதாவது, சிம் கார்டு வாங்கிவுடன் ரூ.51 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆகவே, பழைய கஸ்டமர்களுக்கு இந்த விலைக்கு திட்டம் கிடைக்காது. இதில் கிடைக்கும் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

BSNL-க்கு கோடி கும்பிடு.. ரூ.51 போதும்.. 28 நாட்கள் வேலிடிட்டி!

பிஎஸ்என்எல் ரூ.51 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 51 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். 28 நாட்களில் மொத்தமாக 56 ஜிபி டேட்டாவை பெற்ற கொள்ள முடியும். 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

இதுபோக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இந்த ரூ.51 விலைக்கு திட்டத்தை பெற புதிய சிம் கார்டை வாங்கிவிட்டு, ஜூன் 30ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

இது புதிய சிம் கார்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு கிடைக்கும் சலுகையாக இருக்கிறது. இதுபோக ஏற்கனவே இருக்கும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கும் 2 திட்டங்களில் கூடுதல் டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவை பெறுவதற்கும் ஜூன் 30ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது. இந்த திட்டங்களில் அதிக வேலிடிட்டி கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் 5 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் தினசரி டேட்டா போக கூடுதலாக 5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 150 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.

முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கின்றன. 5 மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், கூடுதல் டேட்டாவுக்கு இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

மேலும், பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்திலும் 10 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 330 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. முந்தைய திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும்.

அதேபோல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகளுடன் 10 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கிறது. இந்த கூடுதல் டேட்டாவை பெறுவதற்கு ஜூன் 30ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 51 Prepaid Plan With 2GB Day Data Unlimited Voice Calls At Rs 51 Offer Valid Till June 30
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X