Home
News

சத்தமின்றி ரூ.51 ப்ரீபெய்ட் திட்டத்தில் சலுகையை வழங்கிய BSNL.. 28 நாட்கள் வேலிடிட்டி.. என்னென்ன நன்மைகள்?

தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்து வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மலிவு விலை திட்டத்தில் அதிக சலுகை வழங்கி உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

அதாவது புதிய பிஎஸ்என்எல் சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.51 திட்டத்தில் அதிக சலுகைகளை வழங்கி உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

 சத்தமின்றி ரூ.51 ப்ரீபெய்ட் திட்டத்தில் சலுகையை வழங்கிய BSNL..

புதிய பிஎஸ்என்எல் சிம் வாடிக்கையாளர்கள் ரூ.51 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 51 Prepaid plan) ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆகவே இந்த திட்டத்தில் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls)
சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.51 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் OTT நன்மை கிடைக்காது.

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த சலுகை இந்தச் சலுகை 2026 மே 22 முதல் 2026 ஜூன் 30 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு கூறியது போல் புதிய பிஎஸ்என்எல் பயனர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். நீங்கள் ஏற்கனவே பிஎஸ்என்எல் பயனராக இருந்தால் இந்தத் திட்டத்தின் பலன்களை உங்களால் பெற முடியாது. மேலும் பிஎஸ்என்எல் வைத்துள்ள சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 144ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் OTT நன்மை கிடைக்காது.

 சத்தமின்றி ரூ.51 ப்ரீபெய்ட் திட்டத்தில் சலுகையை வழங்கிய BSNL..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். எனவே பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 51 Prepaid plan offers unlimited benefits with 28 days validity: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X