Home
News

Jio, Airtel-ஐ முடித்த BSNL.. இனி ரூ.51 க்கு 1 மாத வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் கனவிலும் நினைக்காத விலைக்கு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, வெறும் ரூ.51 விலைக்கு மாத வேலிடிட்டி கொடுக்கிறது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ்களை கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் நிறுவனமானது, ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை வாங்கும் கஸ்டமர்களுக்கு 2 மலிவான திட்டங்களை கொடுக்கிறது. அதாவது, புதிய சிம் கார்டு வாங்கிவிட்டு முதல் ரீசார்ஜ் செய்யும்போது, அடிமட்ட விலைக்கு திட்டங்களை பெற்று கொள்ளலாம். இதில் பிஎஸ்என்எல் ரூ.51 திட்டமானது, கஸ்டமர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுவிட்டது.

Jio, Airtel-ஐ முடித்த BSNL.. இனி ரூ.51 க்கு 1 மாத வேலிடிட்டி.. வாய்ஸ்!

பிஎஸ்என்எல் ரூ.51 திட்ட விவரங்கள் (BSNL Rs 51 Plan Details): டெலிகாம் கணக்குப்படி 28 நாட்களே மாத வேலிடிட்டியாக இருக்கிறது. ஆகவே, இந்த எப்ஆர்சி (FRC) திட்டத்துக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த வேலிடிட்டி முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) ஆனது 28 நாட்கள் முழுவதும் கிடைக்கும். மேலும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இதில் போஸ்ட் டேட்டாவை 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம்.

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் அனுப்பி கொள்ள கிடைக்கும். இந்த விலை ஜியோ, ஏர்டெல் அல்லது வோடபோன் ஐடியா போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களிடம் திட்டங்கள் கிடையாது. இதில் 1 படி மேலே சென்று ரூ.1 விலைக்கு மற்றொரு எப்ஆர்சி திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டமும் புதிய சிம் கார்டு வாங்கிய கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.1 திட்ட விவரங்கள் (BSNL Rs 1 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 24 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும். நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் 24 ஜிபி டேட்டா கொடுக்கப்படும்.

இந்த 1 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். மேலும், 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் இலவமாக வாங்கி கொள்ள கிடைக்கின்றன. ஆகவே, வெறும் ரூ.1 இருந்தால் போதும், சிம் கார்டு மட்டுமல்லாமல், 24 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இந்த ரூ.1 திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளை ஏற்கனவே சிம் கார்டு வைத்திருக்கும் பழைய கஸ்டமர்கள் பெற வேண்டுமானால், ரூ.153 செலவு செய்ய வேண்டும். இந்த விலைக்கு 24 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படும்.

நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். சொல்லப்போனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.153 விலைக்கு கிடைக்கும் திட்டத்தை கூட ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவில் எதிர்பார்க்க முடியாது. ஆரம்ப விலை திட்டமே ரூ.189 விலைக்கு இருக்கிறது. இதிலும் 24 நாட்கள் வேலிடிட்டி கிடைக்காது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 51 Plan With Unlimited Voice Calls 2GB Data 28 Days Validity Check FRC Plan For New SIM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X