Jio, Airtel-ஐ கதற விட்டாப்ல BSNL.. ரூ.51 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா.. ரூ.1 முதல் ரீசார்ஜ்!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் புதிய சிம் கார்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ.1 மற்றும் ரூ.51 விலைக்கு ரீசார்ஜ் திட்டங்கள் கொடுக்கப்படுகின்றன. 24 நாட்கள், 28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன.
பிஎஸ்என்எல் ரூ.51 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 51 Prepaid Plan): அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ் சலுகைகளை 28 நாட்களுக்கு இந்த பிஎஸ்என்எல் ரூ.51 ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படுகின்றன.

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டிக்கு 56 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். மேலும், 40 கேபிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும் போஸ்ட் டேட்டா சலுகையையும் இந்த பிஎஸ்என்எல் ரூ.51 ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது.
இந்த திட்டத்தை பெறுவதற்கு அக்டோபர் 31ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது. அதாவது, இந்த தேதிக்குள் புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டை வாங்கிவிட்டு, முதலாவது ரீசார்ஜ் திட்டத்தை ரூ.51 விலைக்கு செய்தால் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். இதைவிட மலிவான விலைக்கு, அதாவது வெறும் ரூ.1 விலைக்கு மற்றொரு திட்டம் இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.1 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், 24 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இது முந்தைய திட்டத்தைவிட கம்மியாக இருந்தாலும், அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது.
இதில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கின்றன. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 24 நாட்கள் வேலிடிட்டி கிடைத்திருப்பதால், 24 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
முந்தைய திட்டத்தில் கிடைத்த 40 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இந்த பிஎஸ்என்எல் ரூ.1 ப்ரீபெய்ட் திட்டமும் புதிய சிம் கார்டு வாங்கிய கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதுவும் முதவாவது ரீசார்ஜ் திட்டமாக இது இருக்க வேண்டும். வேறு திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு இதை பெற முடியாது.
ஆகவே, பிஎஸ்என்எல் ரூ.51 திட்டம் அல்லது பிஎஸ்என்எல் ரூ.1 திட்டம் ஆகிய இரண்டிலும் எந்த திட்டத்தை முதலாவதாக ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதை கஸ்டமர்களே முடிவு செய்து கொள்ளுங்கள். பிஎஸ்என்எல் சிம் கார்டு முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. ஆகவே, அதற்கு தனியாக செலவு செய்ய வேண்டியது கிடையாது.
பிஎஸ்என்எல் சிம் கார்டு எப்படி பெறுவது: இந்த திட்டங்களை பெற விரும்பும் கஸ்டமர்கள் முதலில் பிஎஸ்என்எல் சிம் கார்டை வாங்கி கொள்ளுங்கள். அருகிலுள்ள பிஎஸ்என்எல் கஸ்டமர் சர்வீஸ் சென்டர் (BSNL Customer Service Centre) அல்லது அங்கீகரிக்கப்பட்ட ரீடெயிலரை (Authorised Retailer) அணுகி புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டை வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
