Home
News

அள்ளி தரும் BSNL.. எல்லா நன்மையுடனும் 75 நாளுக்கு இயங்கும் புது பிளான்.. எந்த திட்டம்? என்ன விலை?

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது இந்தியாவின் நம்பிக்கையான டெலிகாம் நிறுவனமாக மாறி வருகிறது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் சமீபத்தில் அவற்றின் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை 15% அதிகரித்த பிறகு, பிஎஸ்என்எல் இப்போது நாட்டின் முக்கியமான டெலிகாம் நிறுவனமாக மாறியுள்ளது. மலிவு விலையில் அட்டகாச நன்மையை வழங்கும் திட்டங்களை இப்போது பிஎஸ்என்எல் வழங்க துவங்கியுள்ளன.

பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது ரூ. 499 விலையில் மொத்தமாக 75 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த விலையில் இந்த திட்டம் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று விரிவாக இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பயனர்களுக்கு பல விலை புள்ளியில் பல நன்மைகள் அடங்கிய திட்டங்களை வழங்கி வந்தாலும்.

அள்ளி தரும் BSNL.. எல்லா நன்மையுடனும் 75 நாளுக்கு இயங்கும் புது பிளான்

அள்ளி தரும் BSNL.. எல்லா நன்மையுடனும் 75 நாளுக்கு இயங்கும் புது பிளான்:

இந்த திட்டம் மக்களால் அதிகம் ஈர்க்கப்பட்ட திட்டமாக பார்க்கப்படுகிறது. இதற்கான காரணம், இந்த பிஎஸ்என்எல் ரூ. 499 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் முதலில் தினமும் 1ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா நன்மை (high speed data benefits) வழங்குகிறது. இந்த டேட்டா நன்மைக்கு தினசரி வரம்புக்கு உட்பட்டது. ஆகையால், இந்த திட்டத்தின் வேலிடிட்டி முடிவடையும் முன் தினசரி டேட்டாவை எந்த தடையுமின்றி நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இத்துடன் கிடைக்கும் அடுத்த அட்டகாசமான நன்மை என்றால், இந்த திட்டத்துடன் கிடைக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்பு நன்மையை (Unlimited voice calls benefits) ஆகும். முன்பே சொன்னது போல, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 75 நாட்கள் என்பதனால், 2 மாதங்களுக்கு மேலாக தினமும் டேட்டா நன்மை மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 499 பிளான் (BSNL Rs 499 Plan):

இந்த பிஎஸ்என்எல் ரூ 499 பிளான் (BSNL Rs 499 Plan) தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் 75 நாட்களுக்கு மொத்தமாக உங்களுக்கு ஒரு பெரும் தொகுதி எஸ்எம்எஸ் நன்மை பயன்படுத்த கிடைக்கின்றன. இத்துடன் இலவச நன்மையாக பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes) மற்றும் ஈரோஸ் நவ் (Eros Now) போன்ற இலவச நன்மைகளை வழங்குகிறது.

இந்த ஒட்டுமொத்த நன்மைகளையும் பிஎஸ்என்எல் நிறுவனம் 75 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் எஸ்டிடி, நேஷனல் ரோமிங் மற்றும் கிரிக்கெட் PRBT மற்றும் கிரிக்கெட் SMS நன்மைகளையும் வழங்குகிறது. வெறும் 499 ரூபாய் விலைக்குள் 75 நாட்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்கும் இந்த திட்டம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரூ. 500 விலைக்குள் 2 மாதங்களுக்கு மேலான வேலிடிட்டி உடன் இந்த திட்டம் தினமும் 1GB டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை வழங்குவதால், தனியார் டெலிகாம் ஆப்ரேட்டர்களின் வாடிக்கையாளர்கள் கூட இப்போது இந்த திட்டத்தை பார்த்து பிஎஸ்என்எல் பக்கம் மாறத்துவங்கியுள்ளதாக டெலிகாம் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 499 Prepaid Plan With 75 Days Validity Offer 1GB Daily Data Unlimited Voice Calls 100 SMS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X