Home
News

அள்ளி வீசும் BSNL.. தினமும் 2ஜிபி டேட்டா.. 75 நாள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்?

ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் சமீபத்தில் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தி அதிரவைத்தது. அதுவும் அதிக டேட்டா நன்மை மற்றும் ஓடிடி சந்தா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனாலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது வரை எந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையும் உயர்த்தவில்லை.

சமீபத்தில் கூட ரூ.249 விலையில் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்கும் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். குறிப்பாக தற்போது தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி வருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இப்போது அதிக டேட்டா மற்றும் அதிக வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் திட்டங்களைப் பார்க்கலாம்.

அள்ளி வீசும் பிஎஸ்என்எல்.. தினமும் 2ஜிபி டேட்டா.. 75 நாள் வேலிடிட்டி..

பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 347 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 108ஜிபி டேட்டா நன்மை உள்ளது. இதுதவிர பல்வேறு சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம்.

அதாவது பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. மேலும் M/s OnMobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவை, ஜிங் மியூசிக், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், வாவ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அள்ளி வீசும் பிஎஸ்என்எல்.. தினமும் 2ஜிபி டேட்டா.. 75 நாள் வேலிடிட்டி..

பிஎஸ்என்எல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 399 plan) ஆனது தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம். மேலும் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், லோக்தூன் (Lokdhun)போன்ற நன்மைகளையும் இந்த திட்டம் வழங்குகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 485 prepaid plan) ஆனது தினமும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 82 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 123ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அதன்படி இந்த பிஎஸ்என்எல்ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் நன்மை வழங்கப்படுகிறது. மேலும் தினசரி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அள்ளி வீசும் பிஎஸ்என்எல்.. தினமும் 2ஜிபி டேட்டா.. 75 நாள் வேலிடிட்டி..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் (bsnl rs 499 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 75 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 150ஜிபி டேட்டா நன்மை உள்ளது.

மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் கேமிங் சேவைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா நன்மைகளை வழங்குவதால் இந்த திட்டத்தில் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

அதேபோல் இந்தியரில் பிஎஸ்என்எல் நிறுவனம் சில முக்கிய இடங்களில் 4G சேவையை அறிமுகம் செய்துள்ளது. கூடிய விரைவில் நாடு முழுவதும் இந்நிறுவனம் 4ஜி சேவையை வழங்க உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 4ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 499 prepaid plan offers 2GB data per day with 75 days validity: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X