கம்மி விலையில் அள்ளிக் கொடுக்கும் BSNL.. 75 நாள் வேலிடிட்டி.. தினமும் 2ஜிபி டேட்டா.. எந்த திட்டம்?
பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் அதிக டேட்டா நன்மையை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திறக்கும் அதிக வரவேற்பு உள்ளது. ஆனால் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை நாடு முழுவதும் வழங்கிவிட்டன.
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது தான் 4ஜி சேவையை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ரூ.500-க்கு கீழ் 75 நாட்கள் வேலிடிட்டி, அதிக டேட்டா நன்மை மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் ஒரு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

அதாவது ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் தான் 75 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் கிடைக்கிறது. இதுதவிர பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், ஜிங்க் (Zing) மற்றும் கேமிங் சேவைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் நிறுவனம் வழங்கும் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக மாற்றப்படும். குறிப்பாக கம்மி விலையில் அதிக நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. குறிப்பாக ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டங்களை விட பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் அதிக டேட்டா வழங்குகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் 54 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அரினா மொபைல் கேமிங் சேவை உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக மாற்றப்படும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் 75 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக மாற்றப்படும். இதுதவிர பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








