மகா மாஸ்.. BSNL 4G திட்டம்.. 75 நாளுக்கு ஒரே பிளான்.. ரூ.500 கூட இல்லை.. டெய்லி 2GB டேட்டா.. 3GB ஃப்ரீ டேட்டா
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்கனவே அதன் 4ஜி (4G) சேவைகளை பரந்தளவில் விரிவுபடுத்தி, அதன் சேவையை இந்தியா முழுக்க பரவி உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. 4ஜி நெட்வொர்க்குடன் சேர்த்து சில தனியார் நிறுவனங்கள் 5ஜி (5G) சேவையை இந்தியாவில் வழங்கி வருகின்றன. இதுவரை 4ஜி சேவைக்குள் வராமல் இருந்த ஒரே நிறுவனமாக BSNL மட்டுமே இருந்து வந்தது. இது பழைய கதை, ஆனால் புது சகாப்தத்தை பிஎஸ்என்எல் துவங்கிவிட்டது.
பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது இந்தியாவில் அதன் பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவையை பல பகுதிகளில் வழங்க துவங்கிவிட்டது. மக்கள் ஈர்க்கும் விதமாக குறைந்த விலையில் பிஎஸ்என்எல் 4ஜி ரீசார்ஜ் திட்டங்களை (BSNL 4G Recharge Plans) இப்போது அறிமுகம் செய்ய துவங்கியுள்ளது. இந்த திட்டங்களில் மிகசிறந்த திட்டமாக தினசரி வெறும் 7 ரூபாய் செலவில் நன்மைகளை அள்ளித்தரும் திட்டத்தை பற்றி தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

பிஎஸ்என்எல் ரூ. 499 திட்டம் (BSNL Rs 499 Plan):
தற்போதைய தகவல்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது வரை 40,000 புதிய 4ஜி டவர்களை நிறுவியுள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனமும் இந்தியாவில் அதன் 4ஜி சேவையை ஒவ்வொரு வட்டமாக விரிவுபடுத்தி வருகிறது. இதன் காரணமாக பல புதிய திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்து வருகிறது. அதில் குறிப்பிட்ட ஒரு பெஸ்ட் திட்டம் என்றால், அது பிஎஸ்என்எல் ரூ. 499 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs 499 Plan) தான்.
பிஎஸ்என்எல் ரூ. 499 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs 499 Plan) திட்டமானது பிஎஸ்என்எல் 4ஜி திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 75 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இது லோக்கல் மற்றும் STD அழைப்புகள் என்று இரண்டையும் அடக்கியுள்ளது. இந்த திட்டம் தினசரி 100 SMS நன்மையையும் வழங்குகிறது.
மகா மாஸ்.. ரூ.500 கூட இல்லாத திட்டத்தில் 3GB ஃப்ரீ டேட்டா:
இந்த பிஎஸ்என்எல் ரூ. 499 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs 499 Plan) திட்டம் தினசரி 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் நன்மைகள் இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள். பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை குஷி அடைய செய்யும் விதமாக BSNL இப்போது இந்த திட்டத்துடன் கூடுதல் டேட்டா நன்மையை இலவசமாக வழங்குகிறது. குறைந்த விலையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் நன்மையை விரும்புவோருக்கு இது சிறந்தது.
இந்த BSNL Rs 499 Plan திட்டத்துடன் இப்போது உங்களுக்கு 3GB டேட்டா நன்மை இலவசமாக கிடைக்கிறது. இதை பிஎஸ்என்எல் நிறுவனம் எக்ஸ்ட்ரா டேட்டா சலுகை (EXTRA data offer) நன்மையாக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் பகுதியில் பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் கிடைக்கிறது என்றால், நீங்கள் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து பயன்பெறலாம். ஒருவேளை உங்கள் ஏரியாவில் 4ஜி நெட்வொர்க் கிடைக்கவில்லை என்றாலும், இந்த திட்டத்தை பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








