Home
News

பிஎஸ்என்எல் போட்ட போடு.. வெறும் ரூ.498 போதும்.. 6 மாதத்துக்கு வேலிடிட்டி.. யாருங்க விடுவா?

ஒட்டுமொத்த டெலிகாம் வாடிக்கையாளர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ரூ 498 பிளான் (BSNL Rs 498 Plan) மொத்தமாக 180 நாட்கள் வேலிடிட்டியை கொடுக்கிறது. கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பலன்கள் கிடைப்பதால், எந்தவொரு ரீசார்ஜ் தேவையும் இருக்காது.

இந்தியாவில் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களுக்கு இணையாக போட்டிப் போட முடியாமல் தவித்தாலும், பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவான விலையில் அதிரடியான சலுகைகள் வழங்குவதை நிறுத்தவிட வில்லை. இன்றும், தொலைத்தூர கிராமங்களிலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மட்டுமே நம்பி வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர்.

ரூ.498 பிளான் போதும்.. பிஎஸ்என்எல் கொடுத்த 6 மாத வேலிடிட்டி!

மற்ற டெலிகாம் வாடிக்கையாளர்களை போல பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள், அன்லிமிடெட் டேட்டா, ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் போன்ற அதிரடி சலுகைகளை எதிர்பார்ப்பதில்லை. நாள்தோறும் வாய்ஸ் கால் செய்ய முடிந்தால் மட்டுமே போதும் என்று இருக்கின்றனர். இதனால், பிஎஸ்என்எல் நிறுவனமும் வாய்ஸ் கால்களை அடிப்படையாக கொண்ட திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இப்படி அறிமுகம் செய்யப்பட்ட ரூ.498 மதிப்புள்ள திட்டத்தில் எந்தவொரு டெலிகாம் நிறுவனங்களும் வழங்காத சலுகை கிடைக்கிறது. கிட்டத்தட்ட 180 நாட்கள் (6 மாதங்கள்) வேலிடிட்டியை இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் உள்ளதா? டாப்அப் கிடைக்குமா? உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.

பிஎஸ்என்எல் ரூ 498 பிளான் விவரங்கள் (BSNL Rs 498 Plan Details): இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு ரூ.100 டால்க் வேல்யூ (Talk Value) கிடைக்கும். அதோடு 180 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படாது. முழுக்க முழுக்க வாய்ஸ் கால்கள் சலுகைக்கு மட்டுமே, இந்த திட்டம் பொருத்தமாக இருக்கும்.

இதன் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் கால்களுக்கு 10 பைசாவும், மற்ற டெலிகாம் வாடிக்கையாளர் கால்களுக்கு 30 பைசாவும் ஒரு நிமிடத்துக்கு வசூலிக்கப்படும். ஆகவே நீங்கள் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் கால் பேசினாலும், ரூ 6 மட்டுமே உங்களுக்கு செலவாகும்.

இது மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கக் கூடிய திட்டமாகும். ஒருவேளை உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வேண்டும் என்றால், இதேபோல ரூ.500 க்கும் கீழ் மதிப்புள்ள மற்றொரு திட்டத்தில் அந்த சலுகை கிடைக்கிறது. ஆனால், இந்த திட்டத்துக்கு 90 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ 439 பிளான் விவரங்கள் (BSNL Rs 439 Plan Details): இந்த திட்டமும் முழுக்க முழுக்க வாய்ஸ் கால்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இதை ரீசார்ஜ் செய்தால், 90 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கும். அதோடு, 300 எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்படும். எந்தவொரு டோட்டா வழங்கப்படாது. ஆனால், இந்த 90 நாட்களுக்கு எந்த டெலிகாம் சிம்களுக்கும் கால்களை செய்து கொள்ளலாம். வேறு டாப்அப், டால்க் வேல்யூ தேவைப்படாது.

மேலும், இதே செலவில் டேட்டாவும் வேண்டுமென்றால், நீங்கள் ரூ. 485 மதிப்புள்ள திட்டத்தை தேர்வு (BSNL Rs 485 Plan) செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். அதாவது, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா வழங்கப்படும்.

இந்த டேட்டாவை ரோமிங்கில் பயன்படுத்தினால் 40 கேபிபிஎஸ் வேகம் மட்டுமே கிடைக்கும். நாளொன்றுக்கு அதிகபட்சமாக 1.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த திட்டத்தில் 82 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த மூன்று திட்டங்களும் ரூ. 500 க்கும் கீழ் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 498 Plan Comes With 180 Days Validity, Voice Calling, Multiple Recharge Facility Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X