பிஎஸ்என்எல் அடித்த அடி.. வெறும் ரூ.49 போதும்.. ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன்.. 30 நாட்கள் வேலிடிட்டி!
டெலிகாம் மார்கெட்டில் யாராலும் கொடுக்க முடியாத ஓடிடி சலுகைகளை வெறும் ரூ.49 விலை கொண்ட திட்டத்தில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வழங்கி வருகிறது. அதேபோல வெறும் ரூ.199 விலைக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ் மற்றும் ஜீ5 தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனை கொடுக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 49 திட்ட விவரங்கள் (BSNL Rs 49 Plan Details): இந்திய டெலிகாம் மார்கெட்டில் மிகவும் மலிவான விலையில் இந்த ஓடிடி திட்டம் கிடைக்கிறது. வெறும் ரூ.49 செலுத்தினால், லயன்ஸ்கேட் (Lionsgate), ஷீமாரூமீ (ShemarooMe), ஹங்கமா (Hungama) மற்றும் எபிக்ஆன் (EpicON) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ 199 திட்ட விவரங்கள் (BSNL Rs 199 Plan Details): இந்த திட்டத்தில் முன்னணி ஓடிடி நிறுவனங்களின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், ஜீ5 பிரீமியம் (ZEE5 Premium), சோனிலிவ் பிரீமியம் (SonyLIV Premium), யூப்டிவி (YuppTV) மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney + Hotstar) சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. இதற்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 249 திட்ட விவரங்கள் (BSNL Rs 249 Plan Details): இந்த திட்டம் ஏராளமான ஓடிடி தளங்களின் சலுகையை கொண்டுள்ளது. வெறும் ரூ 249 செலுத்தினால், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5 பிரீமியம், சோனிலிவ் பிரீமியம், யூப்டிவி, ஷீமாரூமீ, ஹங்கமா மற்றும் லயன்கேட்ஸ் ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
இந்த திட்டங்களை எப்படி பெறலாம்? இந்த ஓடிடி திட்டங்களை நேரடியாக பெற்றுக்கொள்ள முடியாது. பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள், இந்த திட்டங்களை ஆட்-ஆன் (Add-On) செய்து கொள்ளலாம். அவர்களுக்கு பிராட்பேண்ட் திட்டத்தின் கட்டணத்தோடு, இந்த ஓடிடி கட்டணமும் வசூலிக்கப்பட்டுவிடும். ஆகவே, இந்த நேரத்தில் பிஎஸ்என்எல்லில் உள்ள 2 பிராட்பேண்ட் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பிஎஸ்என்எல் ரூ 599 திட்ட விவரங்கள் (BSNL Rs 599 Plan Details): இந்த திட்டத்தில் 60 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதிகபட்சமாக 3300 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
இந்த 3300 ஜிபி டேட்டாவை 30 நாட்கள் வேலிடிட்டிக்கு முன்பே முழுவதும் பயன்படுத்திவிட்டாலும், 4 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால்கள் சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. இதற்காக எக்யூப்மென்ட்களை வாடிக்கையாளர்கள் வைத்திருக்க வேண்டும். ஆகவே, டேட்டாவோடு வாய்ஸ் கால் சலுகையும் இந்த திட்டத்தில் கொடுக்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ 666 திட்ட விவரங்கள் (BSNL Rs 666 Plan Details): இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் லேண்ட்லைன் கனெக்சன் சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 60 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 3300 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும், லேண்ட்லைன் கனெக்சன் மூலம் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். அதுவே, இன்டர்நேஷனல் கால்களை செய்தால் நிமிடத்துக்கு ரூ.1.20 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த சலுகைகள் போக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications