Home
News

பட்ஜெட் விலையில் அள்ளி கொடுக்கும் மூன்று BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்.. தினமும் 3ஜிபி டேட்டா.. மிஸ் பண்ணாதீங்க..

பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கிவிட்டது. இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் 4ஜி சேவையை இந்நிறுவனம் வழங்கிவிடும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் 5ஜி சோதனை, லைவ் டிவி சேனல் எனப் பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.485, ரூ.489 மற்றும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டங்கள் அதிக சலுகைகள் வழங்குகின்றன. இப்போது இந்த மூன்று திட்டங்களின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பட்ஜெட் விலையில் அள்ளி கொடுக்கும் மூன்று BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்..

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 80 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 160ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன.

அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் . மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். ஆனால் கூடுதல் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 499 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 75 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 150ஜிபி டேட்டா நன்மை உள்ளது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் திட்டம். இந்த இரண்டு திட்டங்களை விட அதிக டேட்டா எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

பட்ஜெட் விலையில் அள்ளி கொடுக்கும் மூன்று BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்..

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நாட்டில் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 485, Rs 489 and Rs 599 prepaid plans offer unlimited offers: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X