Home
News

BSNL மலிவு விலை ரீசார்ஜ்.. தினமும் 2ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள்.. விட்றாதீங்க மக்களே..

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் நாட்டில் சில முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கிவிட்டது. இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்க உள்ளது இந்நிறுவனம். இதுதவிர 5ஜி சோதனை, லைவ் டிவி சேனல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

அதேபோல் தனியார் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் இப்போதும் கூட மலிவு விலை அதிக நன்மைகளை தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் பிஎஸ்ன்எஎல் கம்மி விலையில் அதிக நன்மைகளைத் தரும் மூன்று அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

BSNL மலிவு விலை ரீசார்ஜ்.. தினமும் 2ஜிபி டேட்டா.. விட்றாதீங்க..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 80 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 160ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் . மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். ஆனால் கூடுதல் சலுகைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 249 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக 45 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

BSNL மலிவு விலை ரீசார்ஜ்.. தினமும் 2ஜிபி டேட்டா.. விட்றாதீங்க..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 229 Prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 62ஜிபி வரை டேட்டா கிடைக்கும். இதுதவிர பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ரூ.229 திட்டத்தில் வழங்கப்படுகிறது மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 485, Rs 249, Rs 229 plans offering long validity and unlimited calls: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X