BSNL சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? கம்மி பட்ஜெட்டில் 72 நாள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்.. எந்த திட்டம்?
பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம் சமீபத்தில் தான் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. மேலும் இந்நிறுவனம் அடுத்த வருடம் 5ஜி சேவையை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாக அவ்வப்போது மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி விலையில் 72 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 144ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் OTT நன்மை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிஎஸ்என்எல் ரூ.347 மற்றும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டங்களும் அதிக சலுகைகளை வழங்குகின்றன. இங்கே அந்த திட்டங்களின் நன்மைகளைப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) ஆனது 50 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் இந்த அசத்தலான திட்டம். ஆகவே நீங்கள் இந்த ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 100ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன. அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








