Home
News

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம்: தினசரி 1.5ஜிபி டேட்டா.! வேலிடிட்டி?

பிஎஸ்என்எல் நிறுவனம் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் தினசரி 1ஜிபி டேட்டாவை 30 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

 பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.485 திட்டம் ஆனது ஒரு அன்லிமிடெட் காம்போ பிளான் ஆகும். இந்த திட்டம் 1.5ஜிபி அளவிலான தினசரி டேட்டா, எந்த எஃப்யூபி வரம்பும் இல்லாமல் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் போன்ற சிறந்த சலுகைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

 ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில்

குறிப்பாக இந்த ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி வழங்கப்படும் 1.5ஜிபி டேட்டா வரம்புக்கு பிறகு இணைய வேகம் 40 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். மேலும் கிட்டத்தட்ட இதேபோன்ற திட்டங்களில் மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 84 நாட்கள் மட்டுமேவேலிடிட்டி-ஐ வழங்குகின்றன, ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஆறு நாட்கள் கூடுதல் செல்லுபடியை வழங்குகின்றன.

என்றால் ஏர்டெல்

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஏர்டெல் நிறுவனம் ரூ.588 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனமும் இதேபோன்ற விலையுள்ள திட்டத்தை கொண்டுள்ளது. ஜியோ நிறுவனம் ரூ.555 திட்டத்தை வைத்துள்ளது, இதில் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் ஜியோவின் இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ரூ.699

அண்மையில்பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ரூ.699 வவுச்சரை நாடு முழுவதும் அணுக கிடைக்கும்படி நீட்டித்துள்ளது. வெளிவந்ததகவலின்படி இது ஏற்கனவே கேரள வட்டத்தை தவிர மீதமுள்ள தொலைத் தொடர்பு வட்டங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைத்தது.

வெளிவந்த கேரள டெலிகாமின் அறிக்ககையின்படி, இந்த வவுச்சர் ஆனது

இப்போது வெளிவந்த கேரள டெலிகாமின் அறிக்ககையின்படி, இந்த வவுச்சர் ஆனது இப்போது கேரளாவில் உள்ள பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது மற்றும் ரூ.699 பிஎஸ்என்எல் வவுச்சர் 2021 ஜனவரி 25 முதல் கேரளாவில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.699 வவுச்சரின் நன்மைகள் கேரள வட்டத்தில் மாற்றமடையில்லை, அதாவது பிற வட்டங்களில் வழங்கும்அதே நன்மைகளைத்தான் கேராளாவிலும் வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் நன்மைகளைப் பற்றி சற்று விரவாகப் பார்ப்போம்.

என்எல் ரூ.699 வவுச்சர் ஆனது

பிஎஸ்என்எல் ரூ.699 வவுச்சர் ஆனது பயனர்களுக்கு 0.5ஜிபி அளவிலான தினசரி FUP டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு குறிப்பிட்ட வரம்பை மீறிய பின்னர் இணைய வேகம் 80 கே.பி.பி.எஸ் ஆக குறையும். மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு,100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 160 நாட்கள் ஆகும்.

ன்மை மற்றும்

குறிப்பாக அழைப்பு நன்மை மற்றும் மெசேஜ்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பயனர்கள் ரூ.699 பிஎஸ்என்எல் வவுச்சர்-ஐ தேர்வு செய்வது மிகவும் நல்லது. அதேபோல் டேட்டா நன்மை அதிகம் தேவைப்படும் பயனர்கள் இதை தேர்வுசெய்யாமல் இருப்பது மிகவும் நல்லது. அதேபோல் PLAN BSNL699 என்பதை டைப் செய்து 123 என்கிற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இந்த திட்டத்தை பெறமுடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 485 Prepaid Plan: 1.5 GB Data Daily! 90 days validity: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X