Home
News

வேற என்ன வேணும்.. ஒரே BSNL ரீசார்ஜ் போதும்.. 72 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்.. 2.5 ஜிபி டேட்டா.. 100 எஸ்எம்எஸ்!

தனியார் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, மலிவான விலைக்கு பல திட்டங்களை வைத்துள்ளது. இதில் 72 நாட்கள் வேலிடிட்டி மற்றும் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கும் திட்டமானது, அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. அதிக டேட்டா மலிவான விலைக்கு வேண்டுமானால், இது பெஸ்ட் ஆப்ஷனாகும்.

பிஎஸ்என்எல் ரூ. 485 திட்டம் (BSNL Rs 485 Plan): 2 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி கொடுக்கும் திட்டமாக இது இருக்கிறது. ஏனென்றால், 72 நாட்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். இந்த நாட்கள் முழுவதும் தினசரிக்கு 2.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதற்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பெற்று கொள்ளலாம்.

வேற என்ன வேணும்.. ஒரே BSNL ரீசார்ஜ் போதும்.. 72 நாட்களுக்கு வாய்ஸ்!

72 நாட்களுக்கு தினசரி 2.5 ஜிபி டேட்டா என்கிற கணக்கில் மொத்தமாக 180 ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டேட்டா சலுகையை இதே விலைக்கு ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களில் பெற்று கொள்ள முடியாது. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்கிறது.

இதில் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களும் கொடுக்கப்படும். இந்த திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவுடன் வருடாந்திர திட்டம் ஒன்று கிடைக்கிறது. இதில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்து வந்தது. இப்போது, 2.5 ஜிபி டேட்டாவாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 31ஆம் தேதி வரையில் மட்டுமே 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.

பிறகு நாளொன்றுக்கு 2 ஜிபி டே்டடா சலுகை மட்டுமே கொடுக்கப்படும். இந்த பிஎஸ்என்எல் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Yearly Prepaid Plan) கிடைக்கும் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம். ரூ.2,399 விலைக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. 365 நாட்கள் வேலிடிட்டியை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம்.

ஆகவே, வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ், வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். மேலும், போஸ்ட் டேட்டா சலுகையும் கொடுக்கப்படும். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வீதம் 365 நாட்களுக்கு கிடைக்கும். இந்த தினசரி டேட்டாவுக்கு பிறகு முந்தைய திட்டத்தில் கிடைத்த போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

இதை 40 கேபிபிஎஸ் வேகத்தில் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். முந்தைய திட்டத்தில் மொத்தமாக 180 ஜிபி டேட்டா கிடைத்தது. ஆனால், இந்த திட்டத்தில் 912.5 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆகவே, அதிகப்படியான டேட்டா சலுகையை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. பெரிதாக மாற்றப்படவில்லை.

அதாவது, தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் 2.5 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும் சலுகையாக இருக்கிறது. மார்ச் 31ஆம் தேதி வரையில் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 485 Plan With Unlimited Calls 2.5 GB Data Per Day 72 Days Validity Here Affordable Recharge
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X