Home
News

BSNL போட்ட போடு.. அங்க ரூ.799.. இங்க வெறும் ரூ.485.. 3 மாத வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1.5 ஜிபி டேட்டா!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் கொடுக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களைவிட கிட்டத்தட்ட 40 சதவீதம் மலிவான விலையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் திட்டங்களை கொடுத்துள்ளது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி எஸ்எம்எஸ் மற்றும் டோட்டா போன்ற மொத்த சலுகைகளும் இந்த திட்டத்தில் வருகின்றன. இவற்றின் சலுகைகளை முதலில் பார்ப்போம். எது சிறந்தது என்பதை கஸ்டமர்களே முடிவு செய்யலாம்.

ஜியோ ரூ 799 திட்ட விவரங்கள் (Jio Rs 799 Plan Details): இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஜியோ ஆப்ஸ் சலுகை கூடுதலாக கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. மொத்தமாக 126 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.

BSNL போட்ட போடு.. அங்க ரூ.799.. இங்க வெறும் ரூ.485.. 3 மாத வேலிடிட்டி!

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. ஜியோசினிமா (JioCinema), ஜியோடிவி (JioTV), ஜியோகிளவுட் (JioCloud) சலுகை வருகிறது. 84 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 859 திட்ட விவரங்கள் (Airtel Rs 859 Plan Details): இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் 126 ஜிபி டேட்டா சலுகை வருகிறது. முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் சலுகையும் கிடைக்கிறது.

இதுபோக கூடுதல் சலுகையாக ஏர்டெல் பேமெண்ட் பேங்க் (Airtel Payments Bank) கஸ்டமர்களுக்கு ரிவார்ட்ஸ்மினி123 (RewardsMini123) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இருப்பினும், ஜியோ திட்டத்தை விட ரூ.60 கூடுதலாக இந்த திட்டத்துக்கு வசூலிக்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ 859 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 859 Plan Details): இந்த வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா சலுகைகள் மட்டும் கூடுதலாகவே கிடைக்கின்றன. அதாவது, நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், ரீசார்ஜ் செய்த பிறகு முதல் 3 நாட்களுக்கு 5 ஜிபி கூடுதல் டேட்டா சலுகை வருகிறது.

மேலும், பிஞ்ச் ஆல் நைட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் போன்ற விஐ நிறுவனத்தின் பிரத்யேக சலுகைகளும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இதுபோக முந்தைய திட்டங்களை போல 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை பயன்படுத்தலாம்.

பிஎஸ்என்எல் ரூ 485 திட்ட விவரங்கள் (BSNL Rs 485 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டமானது மற்ற டெலிகாம் நிறுவனங்களைவிட கிட்டத்தட்ட 40 சதவீதத்துக்கும் கம்மியான விலையில் கிடைக்கிறது. இந்த விலையிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1.5 ஜிபி டேட்டா சலுகையை கொடுக்கிறது.

இவ்வளவு சலுகை இருந்தும் ஜியோ போல நாடு முழுவதும் அதிகவேக இன்டர்நெட் சேவையை மட்டும் பிஎஸ்என்எல் கொடுக்கவில்லை. இருப்பினும், டேட்டா தேவைப்படாத கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் அதிக லாபம் தரக்கூடியாதாகும். அதேநேரத்தில் விஐ நிறுவனம் கூடுதல் டேட்டா சலுகையை 4ஜி வேகத்தில் கொடுத்து வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 485 Plan With 82 Days Validity Unlimited Voice Calls Vs Jio Airtel Vi 84 Days Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X