Home
News

அசரவைக்கும் BSNL.. மலிவு விலையில் 80 நாள் வேலிடிட்டி.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்?

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. அதாவது இந்தியாவில் பல முக்கிய இடங்களில் 4ஜி சேவை அறிமுகம் செய்துள்ளது. அதன்பின்பு டெல்லியில் இந்நிறுவனம் 5ஜி சோதனையைத் தொடங்கி உள்ளது. குறிப்பாக தற்போது பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சிம் வாங்க தொடங்கிவிட்டனர்.

அதேபோல் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதன்படி இந்நிறுவனம் குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் இரண்டு திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டங்களின் நன்மைகளைப் பார்க்கலாம்.

அசரவைக்கும் BSNL.. மலிவு விலையில் 80 நாட்கள் வேலிடிட்டி.. எந்த திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 80 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 160ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. இதுதவிர பல்வேறு சலுகைகள்

அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் . மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். ஆனால் கேமிங் சேவை உள்ளிட்ட சில நன்மைகளை இந்த திட்டம் வழங்காது.

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 499 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 75 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 150ஜிபி டேட்டா நன்மை உள்ளது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் திட்டம். இதுதவிர பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் கேமிங் சேவைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் 35,000 BSNL 4G தளங்களை வெற்றிகரமாக அமைத்துள்ளதாகச் சமீபத்தில் தெரிவித்தது. குறிப்பாக நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையாக 4ஜி சேவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டவர்கள் அமைக்கும் பணி முடிந்ததும், 4ஜி தளங்களை 5ஜி நெட்வொர்க்காக மாற்றுவது பிஎஸ்என்எல்-ன் வேலையாக இருக்கும்.

அசரவைக்கும் BSNL.. மலிவு விலையில் 80 நாட்கள் வேலிடிட்டி.. எந்த திட்டம்

குறிப்பாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியதால் தற்போது பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர். அதன்படி BSNL நிறுவனம் கடந்த 2024 ஜூலை மாதத்தில் மொத்தமாக சுமார் 29.4 லட்சம் புதிய பயனர்களை ஈர்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

அதேசமயம் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்களில் உள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக TRAI தகவல் தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கிவிட்டால் இன்னும் அதிக பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 485 Plan With 80 Days Validity Unlimited Voice Calls 2GB daily data Check Cheapest Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X