Home
News

சைலெண்டாக முடிச்ச BSNL.. இனிமே வேலிடிட்டி 80 நாட்கள்.. டேட்டாவும் அதிகம்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2ஜிபி டேட்டா!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bhari Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முன்னணி நிறுவனங்களே மூக்கில் விரல் வைக்கும்படி மத்திய தொலைத்தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு வரும் கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கான (BSNL 4G Services) பணிகள் முடியும் தருவாயில் இருக்கின்றன. மறுபக்கம் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களில் (BSNL Prepaid Plans) டேட்டாவை அதிகரிக்கும் பணி தொடங்கி இருக்கிறது.

தீபாவளிக்கு பிறகு படிப்படியாக பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் வழங்கப்பட இருக்கின்றன. இதனால், அந்த நிறுவனத்துக்கு செல்லும் கஸ்டமர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அடிமட்ட விலைக்கு திட்டங்கள் கிடைப்பதால், இந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்போது, முக்கியமான திட்டத்தில் டேட்டாவை கூட்டி இருப்பதால், கஸ்டமர்கள் மேலும் குஷியாகி விட்டனர்.

சைலெண்டாக முடிச்ச BSNL.. இனிமே வேலிடிட்டி 80 நாட்கள்.. டேட்டா அதிகம்!

பிஎஸ்என்எல் ரூ 485 திட்டம் திருத்தம் (BSNL Rs 485 Plan Revised): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் அடிமட்ட விலைக்கு அன்லிமிடெட் கால்கள் (Unlimited Calls), தினசரி டேட்டா (Daily Data) மற்றும் அதிகப்படியான வேலிடிட்டி கொடுக்கப்பட்டது. இப்போது, வேலிடிட்டி 2 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், டேட்டா சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், கூடுதலாக டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடியும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு முன்பு 82 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டது. இப்போது, 80 நாட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டு வந்தது, இப்போது 2 ஜிபி டேட்டாவாக (2GB Data) அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, 80 நாட்கள் வீதம் 160 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இது கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு போதுமான டேட்டா சலுகையாகும். இந்த 2 ஜிபிக்கு பிறகும் இந்த திட்டத்தில் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, அன்லிமிடெட் டேட்டா சலுகையை இந்த திட்டம் உறுதி செய்திருக்கிறது.

இந்த டேட்டா சலுகை போக, பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ள முடியும். மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. இதைவிட மலிவான விலையில் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மற்றொரு திட்டம் கிடைக்கிறது.

ஆனால், அந்த திட்டத்தில் வாய்ஸ் கால்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பதால், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இருப்பினும், அடிமட்ட விலையில் அதிக நாட்களுக்கு பிஎஸ்என்எல் சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க இந்த திட்டம் பக்காவான தேர்வாக இருக்கிறது. இதன் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.439ஆக இருக்கிறது. இது முந்தைய திட்டத்தை விட மலிவான விலையாகும். இந்த விலைக்கு 90 நாட்கள் வேலிடிட்டியை கொடுக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல எஸ்டிடி கால்கள் மற்றும் ரோமிங் கால்கள் சலுகை கிடைக்கிறது.

இந்த திட்டத்தில் டேட்டா சலுகை மட்டும் கிடையாது. இருப்பினும், 300 எஸ்எம்எஸ் சலுகையை கொடுக்கிறது. டேட்டா இல்லையென்றாலும், வாய்ஸ் கால்களை 90 நாட்கள் வரையில் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, சிம் கார்டும் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும். இதைவிட மலிவான விலைக்கு சிம் ஆக்டிவ் திட்டமானது மற்ற நிறுவனங்களில் கிடையாது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 485 Plan With 2GB Daily Data Unlimited Voice Calls 100 SMS 80 Days Validity Revised Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X