Home
News

BSNL சிம் குடுங்க ஃபர்ஸ்ட்.. ஒரே ரீசார்ஜ்ல முழுசா 72 நாட்கள்.. 2GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. கம்மி விலை!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களை மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மலிவான விலைக்கே கிடைக்கின்றன. இதில் 72 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமானது, மலிவான விலைக்கு கிடைப்பது மட்டுமல்லாமல், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை கொடுக்கிறது. இந்த திட்டத்தின் விலை மற்றும் முழு சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 485 திட்ட விவரங்கள் (BSNL Rs 485 Plan Details): இந்த திட்டம் தமிழ்நாடு உள்பட ஒட்டுமொத்த சர்க்கிள்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இதை ரீசார்ஜ் செய்த பிறகு 72 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 2 மாதங்களுக்கும் மேல் சிம் ஆக்டிவ் (SIM Active) மட்டுமல்லாமல், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்களை (Roaming Calls) பெற்று கொள்ளலாம்.

BSNL சிம் குடுங்க ஃபர்ஸ்ட்.. ஒரே ரீசார்ஜ்ல முழுசா 72 நாட்கள்.. 2 ஜிபி!

இந்த வாய்ஸ் கால்களை போலவே தினமும் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு பேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy Data) டேட்டாவும் கிடைக்கிறது. ஆகவே, 2 ஜிபி டேட்டாவை ஒரு நாளுக்கு முன்னதாகவே முடித்துவிட்டால், அடுத்த நாள் டேட்டா கிடைக்கும் வரையில் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை (Post Data) பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும், 100 எஸ்எம்எஸ் சலுகை வழக்கம்போல கிடைக்கிறது. இதை நாளொன்றுக்கு அனுப்பி கொள்ளலாம். ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களில் 70 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டாவுடன் திட்டம் வேண்டுமானால், அது ரூ.650-க்கு மேல் மட்டுமே கிடைக்கும். ஆனால், பிஎஸ்என்எல்லில் மலிவான விலைக்கு திட்டம் கிடைக்கிறது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், பிஎஸ்என்எல் வெப்சைட் அல்லது செல்ப் கேர் ஆப் மூலம் அதை செய்து கொள்ளலாம். இது வாய்ஸ் திட்டங்களின் கீழ் கிடைக்கிறது. ஒருவேளை உங்களிடம் இருக்கும் பிஎஸ்என்எல் சிம் கார்டு செகண்டரியாக இருந்து, அதில் சிம் ஆக்டிவ் மட்டுமே போதும், டேட்டா போன்ற சலுகைகள் வேண்டாம் என்றால் மற்றொரு திட்டம் இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 439 திட்ட விவரங்கள் (BSNL Rs 439 Plan Details): இதுவொரு வாய்ஸ் கால்கள் திட்டமாக இருப்பதால், முந்தைய திட்டத்தைவிட மலிவான விலைக்கு கிடைக்கிறது. ஆனால், கூடுதல் வேலிடிட்டி கொடுக்கிறது. அதாவது, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்கள் 90 நாட்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். இது முதலில் பார்த்த திட்டத்தைவிட 18 நாட்கள் அதிகமாகும்.

ஆனால், இதில் டேட்டா சலுகையை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, 1 ஜிபி டேட்டா கூட இதில் கிடைக்காது. கூடுதல் டேட்டா வேண்டுமானால், வேறு வழியே இல்லாமல், டேட்டா வவுச்சருக்கு செல்ல வேண்டும். இருப்பினும், வாய்ஸ் கால்களுடன் எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்பட்டுள்ளது. இதை முந்தைய திட்டத்தை போல தினசரிக்கு பயன்படுத்த முடியாது. மொத்தமாக கொடுக்கப்படும்.

அதாவது, 90 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாகவே 300 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொடுக்கப்படும். இதை உங்களது தேவைக்கு ஏற்ப அதிகமாவும் அல்லது குறைவாகவும் அனுப்பி கொள்ளலாம். ஆனால், அந்த 300 எஸ்எம்எஸ் முடிந்துவிட்டால், அதற்கு பிறகு கட்டணம் செலுத்தி எஸ்எம்எஸ்கள் அனுப்ப வேண்டி இருக்கும். வாய்ஸ் கால்கள் போதுமானால், இதை ரீசார்ஜ் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 485 Plan With 2GB Daily Data 72 Days Validity Unlimited Voice Calls Check Best Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X