BSNL சிம் இருக்கா.. இனி 72 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்.. 2.5 ஜிபி டேட்டா.. 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு மலிவான விலையில் 72 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், தினசரிக்கு 2.5 ஜிபி டேட்டாவை கொடுக்கும் திட்டமானது, அதிகளவில் ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரூ.500 விலைக்குள் அதிக டேட்டா சலுகையை கொடுக்கும் திட்டத்தை தேடிக் கொண்டிருக்கும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் ரூ.485 திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஏனென்றால், இதில் தினசரி டேட்டா அதிகமாக கிடைத்துள்ளது. இதுபோக வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளையும் கொடுத்து உள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 485 திட்ட விவரங்கள் (BSNL Rs 485 Plan Details): 72 நாட்கள் வேலிடிட்டியை இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, 180 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி நாட்கள் முழுவதும் பெற்று கொள்ள முடிகிறது.
மேலும், 2.5 ஜிபி டேட்டா முடிந்த பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த விலைக்கு அதிக டேட்டாவை பெற்று கொள்ள முடிவதால், அதிகளவில் ரீசார்ஜ் செய்யப்படுகிறது. மற்ற சலுகைகளை பார்க்கையில், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் செய்து கொள்ளலாம்.
மேலும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். இந்த திட்டம் அதிக டேட்டாவுக்கு கிடைக்கிறது. அதேபோல இதைவிட மலிவான விலைக்கு வாய்ஸ் கால்களை மட்டுமே கொண்ட திட்டம் இருக்கிறது. ஆனால், இதில் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ. 439 திட்ட விவரங்கள் (BSNL Rs 439 Plan Details): முந்தைய திட்டத்துக்கு 72 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. ஆனால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 80 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. அதேபோல விலையும் மலிவாக இருக்கிறது. இதற்கு காரணம் இந்த திட்டத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படாது. வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே கிடைக்கும்.
ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 80 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகைகள் கிடைக்கும். மேலும், 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இது தினசரிக்கு அனுப்பும் எஸ்எம்எஸ் போல கிடையாது. 80 நாட்களுக்கும் மொத்தமாக கிடைக்கும் எண்ணிக்கையாக இருக்கிறது.
இந்த சலுகைகளை தவிர டேட்டா, போஸ்ட் டேட்டா போன்ற சலுகைகள் கிடைக்காது. ஒருவேளை 50 நாட்களுக்கு வேலிடிட்டி போதுமானால், 2.5 ஜிபி டேட்டாவுடன் மற்றொரு பக்காவான ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இது விலையும் மலிவான இருக்கும். டேட்டா மட்டுமல்லாமல், போஸ்ட் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கும்.
பிஎஸ்என்எல் ரூ. 347 திட்ட விவரங்கள் (BSNL Rs 347 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 50 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் 2.5 ஜிபி டேட்டாவை தினமும் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, மொத்தமாக 125 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். மேலும், 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது.
அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை 50 நாட்கள் முழுவதும் கொடுக்கிறது. தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களையும் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். ஆகவே, டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் வேலிடிட்டிக்கு ஏற்ப பல்வேறு ஆப்ஷன்களை பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுத்துள்ளது. இதை தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








