Home
News

இனி இந்த 3 BSNL ரீசார்ஜ் தான் பெஸ்ட்.. 160 நாள் வேலிடிட்டி.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..

தனியார் டெலிகாம் நிறுவனங்கள் விலை உயர்வு அறிவித்த நாள் முதல் தற்போது வரை அதிக வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது வரை மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதேசமயம் இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது பிஎஸ்என்எல்.

தற்போது நாட்டில் பல முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கிவிட்டது பிஎஸ்என்எல் நிறுவனம். கூடிய விரைவில் நாடு முழுவதும் இந்நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது மலிவு விலையில் அதிக நன்மைகளைத் தரும் சில அசத்தலான திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

இனி இந்த 3 BSNL ரீசார்ஜ் தான் பெஸ்ட்.. 160 நாள் வேலிடிட்டி..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 108ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இதில் கிடைக்கும்.

மேலும் பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. M/s OnMobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவை, ஜிங் மியூசிக், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், வாவ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 485 plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 80 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 160ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்.

அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அதேபோல் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.

இனி இந்த 3 BSNL ரீசார்ஜ் தான் பெஸ்ட்.. 160 நாள் வேலிடிட்டி..

பிஎஸ்என்எல் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Plan) 160 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே மொத்தமாக 320ஜிபி டேட்டா நன்மை இதில் உள்ளது. பின்பு தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இதில் கிடைக்கும்.

ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 485 Plan Offers Unlimited Voice Calls, 160GB Data, 80 Days Validity:check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X